ஜம்மு காஷ்மீரில் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடத்த மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட தேடுதலில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர். இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர்.

Encounter breaks in Pulwama between militants and security forces

இன்று அதிகாலை புல்வாமா வனபகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். அங்கு தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக கொடுக்கப்பட்ட தகவலில் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது மரங்களுக்கு அடியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு 4 மணி நேரம் நடந்தது.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் தரப்பில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Encounter breaks in J-K between militants and security forces. When the military were conducting the searches in Pulwama area, militants opened fire on them.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற