மத்தியப்பிரதேச ரேஷன் கடையில் பயங்கர தீ விபத்து: 12 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிக்கிந்தவாரா: மத்தியப்பிரதேச மாநிலம் சிக்கிந்தவாராவில் உள்ள ரேஷன் கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் சிக்கிந்தவாராவில் உள்ள ரேஷன் கடையில் இன்று வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரேஷன் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

Fire accident in Madhya pradesh Ration shop kills 12

கடையில் பற்றிய தீ மளமளவென அக்கம்பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் பலமணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இருப்பினும் இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொதுமக்கள் 12 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire acceident in Madhya pradesh Ration shop. Kills 12 person. 3 injured has admitted in hospital.
Please Wait while comments are loading...