For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்த்ரா ஏவுகணை பரிசோதனை வெற்றி – புதிய சாதனை படைத்தது இந்தியா

Google Oneindia Tamil News

First successful Astra test gives boost to air missile technology
டெல்லி: விண்ணிலிருந்து ஏவி வானில் உள்ள இலக்கை தாக்கும் "அஸ்த்ரா" ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் கடற்படை தாக்குதல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகோய்- 30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்த்ரா ஏவுகணை ஏவப்பட்டு மிக துல்லியமாக இலக்கை நோக்கி சென்று தாக்கியது.

கண்ணுக்கு புலப்படாத இலக்கை தாக்கும் இந்த ஏவுகணையை முதல் முறையாக இந்தியா உருவாக்கியதுடன், வெற்றிகரமாக அதை செலுத்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சோதனை முயற்சியின் வெற்றிக்கு பின் அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய தலைவரான அவினாஷ் சந்தர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம் இதே ரக ஏவுகணைகளை வைத்திருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

English summary
India on Sunday finally tested its first indigenous air-to-air missile 'Astra' from a Sukhoi-30MKI fighter jet, marking a significant turning point in the decade-long tortuous developmental saga of the complex beyond visual range (BVR) weapon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X