For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

62 ஹெக்டேர் வனப்பகுதியில்.. அடங்காமல் பற்றி எரியும் தீ..4 பேர் உயிரிழப்பு.. அரியவகை மரங்கள் சாம்பல்!

Google Oneindia Tamil News

நைனிடால்: உத்தரகாண்ட் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீ விபத்து சம்பவம் தொடர்பாக மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்

உத்தரகாண்ட் தீ விபத்து

உத்தரகாண்ட் தீ விபத்து

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைகளை ஒட்டி பரவியிருக்கும் வனப்பகுதிகள் கடந்த சில நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகின்றன. அதாவது சுமார் 62 ஹெக்டேர் வனப்பகுதியில் தீயின் கோர முகத்தில் சிக்கியுள்ளன. கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீயால் அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் சாம்பலாகியுள்ளன.

4 பேர் உயிரிழப்பு

4 பேர் உயிரிழப்பு

இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல்வேறு விலங்குகளும் தீக்கிரையாகி உள்ளன. சுமார் 12,000 வனத்துறை காவலர்கள், தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவு

தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவு

பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ள தீயின் வேகம் கடுமையாக இருப்பதால் அதனை அணைப்பது மிகவும் சிரமாக உள்ளதுதயை. பற்றி எறியும் தீயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு உத்தரவின் பேரில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஹெலிகாப்டருடன் அங்கு விரைந்துள்ளனர்.

முதல்வர் அவசர ஆலோசனை

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த தீ விபத்தால் இதுவரை ரூ. 37 லட்சம் மதிப்பு அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக மாநில முதன்மை வனத்துறை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

English summary
Four people were tragically killed in a blaze in the Uttarakhand forest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X