For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர இந்தியாவின் முதலாவது அஞ்சல் தலையை பார்க்க கூகுளுக்கு வாங்க...

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: சுதந்திர இந்தியாவின் முதலாவது ஸ்டாம்புவை முகப்பில் வைத்து இந்தியதிருநாட்டின் 68வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறது கூகுள்.

தேசியத்தின் தொப்புள்கொடியாக இருப்பது தாய்நாட்டின் மூவர்ணகொடி. இதில் காவி மற்றும்பச்சை வண்ணத்தை கூகுள் என்ற பெயரில் தாங்கியபடி உள்ளது அதன் முகப்பு.

ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த்

ஆங்கில எழுத்தான ஓ என்பதற்கு பதிலாக, சுதந்திர இந்தியாவின் முதலாவது ஸ்டாம்பும், 2வதுஓ எழுத்துக்கு பதிலாக, இன்றைய தேதியிட்ட அஞ்சல் முத்திரையும் கூகுள் வைத்துள்ளது.இந்தியாவின் முதலாவது ஸ்டாம்பை பார்க்க இளம் தலைமுறைக்கு இது வாய்ப்பாக அமைந்துள்ளது.அந்த ஸ்டாம்பில் பட்டொளி வீசி பறக்கும் தேசிய கொடி படமும், ஜெய்ஹிந்த் என்று ஹிந்தியில்எழுதப்பட்டுள்ளதையும் நாம் பார்க்க முடியும்.

2003லிருந்து தொடங்கிய கூகுள்

2003லிருந்து தொடங்கிய கூகுள்

கூகுள் நமது சுதந்திரதினத்தை பெருமைப்படுத்துவது இது புதிது கிடையாது. 2003ம்ஆண்டு முதல் முகப்பு பக்கத்தில் தேசிய கொடி மற்றும் தேசியம் சார்ந்த படங்களைவைத்துவருவது கூகுளின் வழக்கமாக உள்ளது.

கொடி கம்பம்

கொடி கம்பம்

2003 மற்றும் 2005ம் ஆண்டுகளில் கூகுளின் எல் எழுத்தில் தேசிய கொடி கம்பத்தை காண்பித்துபெருமை சேர்ந்தது. இவ்விரு ஆண்டுகளிலும் ஒரே போன்ற முகப்பை கூகுள் கொண்டிருந்தது.

தேசிய கொடி

தேசிய கொடி

அதே நேரம் இடைப்பட்ட 2004ம் ஆண்டு ஏனோ கூகுளில் சுதந்திர தின சிறப்பு முகப்புவைக்கப்படவில்லை. 2006ம் ஆண்டு கூகுளில் வரும் ஓ எழுத்துக்களுக்கு பதிலாக தேசியகொடியின் மத்தியிலுள்ள அசோக சக்கரம் வைக்கப்பட்டது. 2007ம் ஆண்டு, இந்தியா 60வது ஆண்டுகொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, முகப்பு எழுத்துக்கு பின்புறம் இந்திய தேசிய கொடிவைக்கப்பட்டிருந்தது.

English summary
The doodle on the Google India home page this year is a familiar symbol- independent India's first stamp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X