குஜராத்: முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்
குஜராத்தில் முதல் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது.
குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 21. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 24.

எஞ்சிய 93 தொகுதிகளுக்கான் வாக்குப் பதிவு டிசம்பர் 14-ல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட வாக்குகளும் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுவுகள் வெளியிடப்படும்.
இத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக நாளை வெளியிட இருக்கிறது. நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும்.












Click it and Unblock the Notifications