குஜராத்: 2-வது கட்ட சட்டசபை தேர்தல் நிறைவு- 60%-க்கும் அதிகமாக வாக்குகள் பதிவு!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இன்று 2-வது கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. மொத்தம் 60%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.
குஜராத் சட்டசபைக்கான 182- தொகுதிகளில் 89 இடங்களில் டிசம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது.
|
முக்கியமானவர்கள்
இன்றைய களத்தில் 851 வேட்பாளர்கள் இருந்தனர். இவர்களில் துணை முதல்வர் நிதின் பட்டேல், அமைச்சர் பூபேந்திர சுதஷ்மா, காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாகுர் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். பாரதிய ஜனதா கட்சி 93 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி 81, பகுஜன் சமாஜ் 75, ஆம் ஆத்மி 8, ஐக்கிய ஜனதா தளம் 14, தேசியவாத காங்கிரஸ் 28, சிவசேனா 17 வேட்பாளர்களையும் இன்று களமிறக்கியது.
பெண்கள்
இன்றைய தேர்தலில் மொத்தம் 2,22,96,867 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 1,07,48,977 பேர் பெண் வாக்காளர்கள்; 455 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
|
மோடி உள்ளிட்டோர் வாக்களிப்பு
24,575 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று வாக்களித்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

66.75% வாக்குகள் பதிவு
மாலை 5 மணிவரை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று சுமார் 60%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.

மோடி வாக்களிப்பு
டிசம்பர் 9-ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் 66.75% வாக்குகள் பதிவாகி இருந்தன. 2.12 கோடி பேர் வாக்களித்தனர். மொத்தம் 977 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.