For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேகமாக சென்ற கான்வாய்.. திடீரென வந்த ஆம்புலன்ஸ்! காரை நிறுத்திய பிரதமர் மோடி! குஜராத்தில் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை குஜராத்தில் பிரம்மாண்டமான பேரணி நடத்திய நிலையில், அதில் நெகிழ்ச்சி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

குஜராத்தில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சியிலுள்ள நிலையில், இப்போது தேர்தல் நடைபெறுகிறது.

நேற்றைய தினம் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மந்தமாகவே இருந்த இந்த வாக்குப்பதிவில் 60% மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளது.

நாய் போல் சாவேனாம்.. ராவணன், ஹிட்லர்! காங்கிரஸ் தலைவர்கள் போட்டிபோட்டு திட்டுறாங்க - “எமோசன்”ஆன மோடி நாய் போல் சாவேனாம்.. ராவணன், ஹிட்லர்! காங்கிரஸ் தலைவர்கள் போட்டிபோட்டு திட்டுறாங்க - “எமோசன்”ஆன மோடி

குஜராத்

குஜராத்

குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக ரொம்பவே தீவிரமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பாஜகவே ஆட்சியுள்ள நிலையில், அந்த நிலை தொடர வேண்டும் என்பதே அக்கட்சித் தலைவர்களின் விருப்பம். இதற்காக அவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். மேலும், தேர்தல் அறிக்கையிலும் பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நேற்று 89 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் வரும் டிச. 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இன்னும் இரு தினங்களில் பிரசாரம் நிறைவடையும் நிலையில், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் இறங்கினார். பிரதமர் மோடிக்கு பிரசாரத்தின் போது குஜராத் மக்கள் பெருந்திரளாக வரவேற்பு தந்தனர்

பேரணி

பேரணி

இதற்கிடையே நேற்றைய தினம் குஜராத் அகமதாபாத்தில் பிரதமர் மோடி ரோட் ஷோ எனப்படும் பேரணியை நடத்தினார். மாலை 5 மணியளவில் தொடங்கிய இந்த பேரணி, இரவு 9.45 மணி வரை நடைபெற்றது. இதற்காக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி சுமார் 50 கிமீ பயணித்து இந்த ரோட் ஷோவில் பொதுமக்களைச் சந்தித்தார். பிரதமர் மோடி இவ்வளவு பெரிய ரோட் ஷோவில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். இந்த பேரணியில் பிரதமர் மோடியைக் காணத் திரளான மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

மோடி

மோடி

அகமதாபாத்தில் உள்ள நரோதா காமில் தொடங்கிய இந்த பேரணி, தக்கர் பாபாநகர், நிகோல், காந்திநகர் சவுத் என பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்றது. இதற்காக அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. இரு முறை பிரதமர் மோடி செல்லும் பாதைகளில் விரிவான பாதுகாப்பு சோதனையும் செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியில் பிரதமர் மோடியைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமர் மோடி வாகனத்தில் நின்றவாறே பார்த்துக் கையசைத்துச் சென்றார்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

இந்த பேரணியின் போது, சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது பிரதமர் மோடி பேரணியில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஆம்புலன்ஸ் வாகனம் பிரதமர் மோடியின் வாகனத்திற்குப் பின்னல் இருந்தது. இதைப் பிரதமர் மோடியின் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் கவனித்தனர். இதையடுத்து பிரதமர் சென்று கொண்டிருந்த வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு, அந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல பாதுகாப்புப் படையினர் ஏற்பாடு செய்து தந்தனர். இதனால் பிரதமர் மோடி சென்றுகொண்டிருந்த வாகனம் அத்தனை பேர் இருந்த சாலையில் சில நொடிகள் நிறுத்தப்பட்டன.

வீடியோ

வீடியோ

அந்த ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற பிறகு பிரதமர் மோடி தனது பேரணியை வழக்கம் போலத் தொடர்ந்தார். இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் இந்த செயலை அவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பிரமதர் மோடியின் கான்வாய் ஆம்புலன்ஸுக்காக நிறுத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, மோடி குஜராத் சென்ற போது, இரு முறை வாகனம் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Modi stopped in higways to give way to ambulance: Gujarat election PM Modi car stopped for ambulance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X