Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன்.. 87 வயதில் 10, 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாஜி முதல்வர்! வெல்டன் பாஸ்

Subscribe to Oneindia Tamil

ஹரியானா: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவ்தாலா தனது 87 வயதில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து சான்றிதழ் பெற்றுள்ளார். இதன்மூலம் படிப்புக்கு வயது ஒரு தடையில்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவ்தாலா. இவருக்கு தற்போது 87 வயது ஆகிறது. இவர் இந்தியாவின் 6வது துணை பிரதமரான சவுத்ரி தேவி லால் மகன் ஆவார்.

87 வயது ஆனாலும் கூட ஓம் பிரகாஷ் சவ்தாலா அரசியலில் செயல்பட்டு கொண்டு தான் உள்ளார். இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவரான இவர் தற்போதும் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 4 முறை முதல்வர்

4 முறை முதல்வர்

ஹரியானா முதல்வராக ஓம்பிரகாஷ் சவ்தாலா 4 முறை செயல்பட்டுள்ளார். 1989 டிசம்பர் 2 முதல் 1990 மே 22 வரை முதல் முறையாக பதவி வகித்தார். அதன்பிறகு 1990 ஜூலை 12 முதல் ஜூலை 17 வரை ஐந்து நாட்கள் 2வது முறையாக முதல்வராக இருந்தார். அதன்பிறகு 1991 ஜூலை 22 முதல் ஏப்ரல் 6 வரையும், 1999 ஜூலை 24 முதல் 2005 மார்ச் 5 வரையும் முதல்வராக பொறுப்பு வகித்து உள்ளார்.

10ம் வகுப்பு தேர்ச்சி இல்லை

10ம் வகுப்பு தேர்ச்சி இல்லை

மாநிலத்தின் உயர் பதவியான முதல்வர் பொறுப்பு வகித்தாலும் கூட ஓம்பிரகாஷ் பள்ளி படிப்பை நிறைவு செய்யவில்லை. 10ம் வகுப்பு ‛பாஸ்' ஆகவில்லை. இதனால் எப்படியாவது பள்ளி படிப்பை முடித்து விட வேண்டும் என அவர் முடிவு செய்து செயல்பட்டு வந்தார். மேலும், தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என அவர் விரும்பினார்.

சிறையில் படிப்பு

சிறையில் படிப்பு

இதற்கிடையே ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திஹார் சிறையில் ஓம்பிரகாஷ் சவ்தாலா அடைக்கப்பட்டார். அரசியல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்றி சிறையில் இருந்ததால் பள்ளி படிப்பை நிறைவு செய்ய விரும்பினார். இதனால் சிறையில் இருந்தபடியே அவர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் ஆங்கிலத்தை தவிர அனைத்து தேர்வுகளிலும் அவர் 2017 ல் தேர்ச்சி பெற்றார்.

10, 12 பொதுத்தேர்வில் தேர்ச்சி

10, 12 பொதுத்தேர்வில் தேர்ச்சி

அதன்பிறகு கடந்த ஆண்டு திறந்தவெளி பள்ளி படிப்பு மூலம் 12ம் வகுப்பு தேர்வு எழுதினார். ஓம்பிரகாஷ் சவ்தாலா 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் 10ம் வகுப்பு ஆங்கில தேர்வை அவர் எழுதினார். இதில் 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதிலும் அவர் பாஸ் ஆகி இருந்தார். இதன்மூலம் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றுள்ளார். சவுதாலாவுக்கான மதிப்பெண் சான்றிதழை மாநில கல்வித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சண்டிகரில் நேரில் வழங்கினார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

ஓம்பிரகாஷ் சவ்தாலா 10, 12 தேர்வில் வெற்றி பெற்றதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஓமர் அப்துல்லா உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் வெளியான 'தஸ்வி' என்ற இந்தி திரைப்படத்தில் சிறையில் இருக்கும் மாஜி முதல்வர் 10ம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆகும் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இது நிஜத்திலும் நடந்துள்ளது. இதனால் அந்த படத்தின் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை நிம்ரத் கவுர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+