For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இந்த டீச்சர.. என்னா அடி! வீடியோ

லக்னோ பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவன் வகுப்பில் வருகைப் பதிவேடு எடுக்கும் போது உள்ளேன் என்று சொல்லாததால் 40 முறை அடித்து தன்னுடைய அரக்கத்தனத்தை காட்டியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

லக்னோ: பள்ளி வகுப்பறையில் வருகைப் பதிவேட்டின் போது மௌனமாக இருந்த சிறுவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடிக்கும் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

லக்னோவின் செயின்ட் ஜான் வியன்னா பள்ளியில் மாணவன் ஒருவன் வகுப்பறையில் வருகைப் பதிவேட்டின் போது பிரசென்ட் அதாவது உள்ளேன் ஐயா என்று சொல்லவில்லையாம். இதற்காக அந்த சின்னஞ்சிறு மாணவனை அடித்து தன்னுடைய கொடூர முகத்தை காட்டியுள்ளார் ஆசிரியர் ஒருவர். சுமார் 3 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் ஏறத்தாழ 40 முறை மாணவன் கன்னத்தில் அறைந்திருக்கிறார் ஆசிரியர்.

இடையில் சிறிது நேரம் கைவலி எடுக்க கைகள் இரண்டையும் தேய்த்து சூடேற்றிக் கொண்டு மீண்டும் அடிக்கிறார். பாவம் அந்தப் பிஞ்சு எல்லா அடியையும் வாங்கிக் கொண்டு அமைதியாக நிற்கிறது. அப்படியும் கோபம் அடங்காத ஆசிரியர் அவனை நெஞ்சில் பிடித்து தள்ள கீழே விழும் மாணவன் மீண்டும் எழுந்து நிற்க அவனுடைய காலரை பிடித்து இழுக்கிறது அந்த ராட்சசி.

 ஈரக்குலை நடுங்கும் காட்சிகள்

ஈரக்குலை நடுங்கும் காட்சிகள்

இவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு கீழே விழுந்த பேப்பரை எடுத்துத் தர ஆசிரியர் உத்தரவிட அதையும் எடுத்துத் தந்து அமைதியாக மாணவன் நிற்கிறான். அவனை வைத்து மற்ற மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த பேய் கடைசியாக செய்த செயல் ஈரக்குலையை நடுங்க வைக்கிறது.

 பேரதிர்ச்சி காட்சிகள்

பேரதிர்ச்சி காட்சிகள்

மாணவனின் டையை பிடித்து இழுத்து ஒரு சுற்று சுற்றி அவனை சுவற்றோடு சுவறாக மோதச் செய்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு இந்தக் காட்சிகள் பேரதிர்ச்சியாக உள்ளது.

 அமைதியாகவே இருந்த மாணவன்

அமைதியாகவே இருந்த மாணவன்

பாவம் இத்தனை அடியையும் வாங்கிய அந்த பிஞ்சு வீட்டிற்கு போய் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த மாணவனின் தந்தை அவனுடைய வகுப்பு மாணவர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் வகுப்பறையில் நடந்தவற்றை விவரித்துள்ளனர்.

 விசாரணையில் அம்பலம்

விசாரணையில் அம்பலம்

இதனையடுத்து மாணவனின் தந்தை பள்ளி முதல்வரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் வகுப்பறையில் இருக்கும் சிசிடிவி காட்சிப் பதிவுகளை பார்த்த போதே ராட்சசி ஆசிரியரின் சுயரூபம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆசிரியரை பணிநீக்கம் செய்வதாக முதல்வர் மாணவனின் தந்தையிடம் கூறியுள்ளார்.

இவரெல்லாம் ஆசிரியரா?

ஒரு மாணவனை நல்வழிப்படுத்துவது தான் ஆசிரியரின் கடமை. இயல்பாக இருக்கும் திறமைகள் தவிர எதையும் கட்டாயப்படுத்தி மாணவர்களிடம் கொண்டு வர முடியாது. ஆசிரியர் பணி என்பதே அர்ப்பணிப்போடு இருப்பது தான் அதற்கு முதன்மையான பொறுமையை இழந்த இவர் ஆசிரியராகஇருக்கவே தகுதி இல்லாதவர்.

English summary
A teacher from St. John Vianney School, Lucknow, slapped a student 40 times in three minutes for not saying 'present' during the attendance call, heart wrecking incident caught in CCTV footage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X