For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கதேசத்தில் தாக்குதல் எதிரொலி: உஷார் நிலையில் அஸ்ஸாம், மே. வங்கம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் நிலையில் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் அண்மையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர். இந்த நிலையில் இன்று 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

High alert in West Bengal and Assam

இத்தாக்குதலில் 2 போலீசார் பலியாகி உள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

ஐஎஸ் இயக்கத்தின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பட்வா விதித்ததாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில் வங்கதேச தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களின் கொல்கத்தா, குவஹாத்தி உள்ளிட்ட நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
Home Ministry officials tell OneIndia that in the wake of attack in Bangladesh, high alert in West Bengal and Assam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X