For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்துறை அமைச்சர் உரையில் விஞ்ஞானி பெயரை தப்பாக எழுதி தந்த அதிகாரிகள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு தயாரித்து கொடுத்த உரையில், விஞ்ஞானி பெயரை அதிகாரிகள் தவறாக இடம்பெறச் செய்து அதை அமைச்சர் வாசித்த சம்பவம் நிகழ்ச்சியொன்றில் நடந்தது.

டெல்லியில் ஹிந்தி திவாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, உள்துறை அமைச்சரின் உதவியாளர்கள் ஒரு உரையை தயாரித்துக் கொடுத்தனர்.

Home Ministry press release confuses Heisenberg with Eisenhower

அந்த உரையை ராஜ்நாத்சிங் படிக்கும்போது "நிலையற்ற தன்மை குறித்து புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசென்ஹோவர் கண்டுபிடித்தது, இந்து வேதங்களில் இருந்து எடுக்கப்பட்டதுதான். வேதங்கள் குறித்து ரவீந்திரநாத்தாகூரிடம் ஐசென்ஹோவர் உரையாடியபோது, இந்த தியேரிக்கான அடிப்படை அவருக்கு கிடைத்தது" என்று தெரிவித்தார்.

ஆனால் உண்மையிலேயே நிலையற்ற தன்மை குறித்த தியேரியை உருவாக்கியது இயற்பியல் விஞ்ஞானி, ஐசென்பெர்க் ஆகும். அவர்தான் தாகூரிடம் உரையாடியவர். ஆனால் விஞ்ஞானி பெயரை மாற்றிக்கொடுத்து உள்துறை அமைச்சரை வில்லங்கத்தில் மாட்டி வைத்துள்ளனர் உள்துறை அமைச்சக அதிகாரிகள்.

English summary
A press release issued by the Home Ministry makes the head of the ministry look a little ignorant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X