பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி.. ரொம்ப ஈஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த இரண்டையும் எப்படி இணைப்பது?

இதோ உங்களுக்காக ஈஸி வழிமுறைகள்..

இணையத்தின் மூலம் இணைப்பு

இணையத்தின் மூலம் இணைப்பு

முதலில் incometaxindiaefiling.gov.in என்ற இணைய தளத்தில் முதலில் நுழைய வேண்டும். அதில், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான திரை ஒன்று வரும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.

சரிபார்ப்பு

சரிபார்ப்பு

ஆதார் எண்ணை பதிவிடும் முன்பு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்கள் சரியாக இருக்கின்றதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இணைப்பு

இணைப்பு

பின்னர், அனைத்து தகவல்களையும் சரி பார்த்த பிறகு ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிய வேண்டும். பின்னர் இணைக்கவும் என்ற பட்டனைத் தட்ட வேண்டும்.

அதன் பின்னர் ஆதார் எண் பான் எண்ணுடன் இணைக்கப்படும். பான் மற்றும் ஆதார் கார்டு இரண்டிலும் உள்ள தகவல்கள் சரியாக இருந்தால் மட்டுமே இரண்டும் இணையும். அதை மற்றும் சரியாக ஒன்று இரண்டு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இதே போன்று ஆதார் இணையதளத்தில் சென்றும் பான் கார்டை இணைக்கலாம்.

எஸ்எம்எஸ் மூலமும் இணைப்பு

எஸ்எம்எஸ் மூலமும் இணைப்பு

கம்யூட்டர் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். கையில் இருக்கும் செல்போனிலேயே பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க முடியும். அது எப்படி என்றால்.. ‘UIDPAN என்று ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு ஸ்பேஸ் விட்டு 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் விட்டு 10 இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும். இந்தக் குறுஞ்செய்தியை 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இப்படி அனுப்புவதன் மூலம் எளிதாக ஆதார் மற்றும் பான் எண்களை இணைத்து விடலாம்.

ஆன்லைனில் இணைப்பதில் சிக்கல்

ஆன்லைனில் இணைப்பதில் சிக்கல்

ஆதார் கார்ட்டில் உள்ள பெயர், பிறந்தே தேதி என அனைத்து தகவல்களும் பான் கார்டுடன் ஒத்துப் போக வேண்டும். இல்லை என்றால் இணைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சின்ன பிழை இருந்தால் கூட பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது. இதே போன்ற சிக்கல் எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போதும் ஏற்படுகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இணையம் மற்றும் செல்போன் மூலம் ஆதார் மற்றும் பான் எண்கள் இணைக்கப்படும் போது, எல்லா தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். இல்லை என்றால் இரண்டும் இணையாது. டைம் வேஸ்ட்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
How to link PAN with Aadhaar number on internet.
Please Wait while comments are loading...