மனைவிக்குத் தெரியாமலே கிட்னியை எடுத்து விற்ற கணவன்.. கொல்கத்தாவில் நடந்த குரூரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவின் பிஸ்வாஜித் சர்க்கார் என்பவர் தன்னுடைய மனைவியின் கிட்னியை எடுத்து விற்று இருக்கிறார். இதுகுறித்து அவரது மனைவி ரீத்தா சர்க்கார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்னி எடுக்கப்பட்டது அந்தக் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் கூட தெரியாமல் இருந்துள்ளது.

மனைவியின் கிட்னியை அந்தக் கணவன் எடுத்தது எப்படி என்ற உண்மை இப்போதுதான் வெளியாகி இருக்கிறது.

மருத்துவமனை

மருத்துவமனை

பிஸ்வாஜித் சர்க்கார் மனைவி ரீத்தா சர்க்கார் கடந்த சில மாதங்களாக மோசமாக வயிறு வலிக்கிறது என்று கூறியுள்ளார். மோசமாக முதுகும் வலித்து இருக்கிறது. ஆனால் அந்தப் பெண்ணின் கணவன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்து இருக்கிறார்.

இல்லை

இல்லை

பின் அந்தப் பெண் பட்ட கஷ்டத்தை பார்த்துவிட்டு மாமியார் வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்குச்அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து இருக்கிறார்கள். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு ஒரு கிட்னி இல்லாதது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்து இரு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எப்படி

எப்படி

அந்தப் பெண்ணுக்கு இரண்டு வருடம் முன்பு வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அப்போதுதான் இவர் கணவன் மனைவியின் கிட்னியை எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதன்முலம் அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் கிட்னியை விற்றுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் விசாரித்த போது இந்த உண்மை வெளியே வந்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு அவர் காரணமும் சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் வீட்டில் கூடுதலாக கேட்ட வரதட்சணை பணம் எதுவும் வரவில்லை என்று இப்படிச் செய்துள்ளார். காவல்துறை இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பியையும் கைது செய்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Husband stolen wife's kidney without her concern in Kolkata. He took the kidney 2 years ago. Police arrested him in several sections.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற