எல்லையில் வாலாட்டினால் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'.. பாகிஸ்தானுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை!
பனாஜி: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது. எல்லை பகுதியில் அத்துமீறும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. பயங்கரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் எல்லைகளை யாரும் தொந்தரவு செய்தால் பதிலடி கொடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதிய அத்தியாயத்தின் தொடக்கம்
கோவாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய அமித்ஷா விழாவில் பேசியதாவது:- இந்தியா எல்லை பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானபோது ஒரு காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தது. ஆனால் இப்போது இந்தியா பயங்கரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலை அளித்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் பூஞ்ச் மீது தாக்குதல் நடத்தியபோது, இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் வடிவில் தகுந்த பதிலை அளித்தது. அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தது.

தொந்தரவு செய்ய முடியாது
இந்தியா அதே மொழியில் பதில் அளிக்கும் என்ற செய்தியை அது கொடுத்தது. பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையிலான சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒரு முக்கியமான படியாகும். இந்தியாவின் எல்லைகளை யாரும் சீர்குலைக்க முடியாது என்று நாம் எதிரிகளுக்கு தெளிவான செய்தி அனுப்பியுள்ளோம். தற்போது இந்தியாவின் எல்லைகளை யாரும் தொந்தரவு செய்ய முடியாது என்ற செய்தி தெளிவாக உள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.
Recommended Video

17 ராணுவ வீரர்கள் வீர மரணம்
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இரவு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரியில் அமைக்கப்பட்டு இருந்த ராணுவ முகாம்கள் மீது வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுப்பிரிவு இருந்ததாக தகவல் வெளியானது.

'சர்ஜிக்கல் ஸ்டிரைக்
ஆனால் அடுத்த சில நாட்களில் இந்தியா பயங்கரவாதிகளுக்கு தரமான பதிலடி கொடுத்தது. அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்த நமது ராணுவ வீரர்கள் 7 பயங்கரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்று அழைக்கப்படுகிறது. இந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மனதில் வைத்து பேசிய அமித்ஷா, பாகிஸ்தானுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications