For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களுக்கு ஓட்டு போடலை..: வாக்காளர்களை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ.- தீயா பரவும் வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

கோட்டா: ராஜஸ்தானில் வாக்காளர்களை பாஜக எம்.எல்.ஏ. பவானி சிங் ரஜாவத் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் லாத்பூரா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பவானி சிங் ரஜாவத். அவர் கடந்த மாதம் ராஜஸ்தானில் நடந்த முனிசிபால் தேர்தலின்போது வாக்காளர்களை மிரட்டியபோது செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

'If You Don't Vote For Us, Don't Stay Here': BJP Legislator Says This Isn't A Threat

அந்த வீடியோவில் அவர் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் இந்த பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாக்காளர்களை மிரட்டியுள்ளார்.

இது குறித்து ரஜாவத் கூறுகையில்,

நான் யாரையும் திட்டவில்லை, மிரட்டவில்லை. நான் எப்பொழுதுமே ஏழைகளுக்கு உதவி செய்பவன். நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் இங்கு தங்கக் கூடாது என்றேன். அவர்களுக்கு அந்த இடம் கிடைக்க நான் தான் உதவி செய்தேன். உங்களுக்கு வசதி செய்து கொடுத்த பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தான் மக்களிடம் கூறினேன். பல தலைவர்கள் இது போன்று பேசுகிறார்கள் என்றார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு தெரிந்த ஒரு ஆண் நர்ஸை பணியமர்த்தாத டாக்டரை கோட்டாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பிரகலாத் குஞ்சால் போனில் மிரட்டினார். அந்த உரையாடல் லீக்காகி தீயாக பரவியது. இந்நிலையில் ரஜாவத் மிரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

English summary
After Gunjal, another BJP MLA from Kota is in crisis after a video in which he threatened voters has surfaced in the social networking sites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X