Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவ பள்ளியில் ஹிஜாப் தடை! கர்நாடகத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் வெடித்தது சர்ச்சை.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டதற்கு முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக கல்வி நிறுவனங்களில் முதல் முதலாக ஹிஜாப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதன்மூலம் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை அமலில் உள்ளது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி

இந்நிலையில் தான் காஷ்மீரில் உள்ள பள்ளியில் ஹிஜாப் பிரச்சனை எழுந்துள்ளது. காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் டேக்கர் பரிவார் பள்ளி உள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபப்பட்டு இருந்தது.

ஹிஜாப் தடை

ஹிஜாப் தடை

அதில், ‛‛பரிவார பள்ளி என்பது உணர்வு ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் கற்று வளரக்கூடிய இடமாகும். பள்ளி ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் மாணவர்களுக்கு முறையான கற்பித்தலை வழங்குவதே முக்கிய நோக்கமாகும். மேலும் மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வரவேற்று, பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் உணர செய்ய வேண்டும். இதனால் பள்ளி நேரத்தில் ஹிஜாப் அணிவதை தவிர்க்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, இதனால் மாணவர்கள் கல்வி கற்க சிறப்பான வசதி உருவாகும். மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் மாணவர்கள் எளிமையாக தொடர்பு கொள்ள முடியும்'' என கூறப்பட்டு இருந்தது.

வெடித்தது சர்ச்சை

வெடித்தது சர்ச்சை

கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை அமலில் உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியிலும் அது நடைமுறையாகிறதா என்ற கேள்வி எழுந்தது. மேலும் இது விவாதப்பொருளாகி சர்ச்சையானது. இந்த சுற்றறிக்கைக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களா உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இதுதொடர்பாக உமர் அப்துல்லா, ''ஒவ்வொருவரும் தங்கள் மத பழக்கவழக்கத்தை பின்பற்ற உரிமை உள்ளது. கர்நாடக பாணியை காஷ்மீருக்கு கொண்டு வரும் முயற்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் ஊழியர்கள் இதற்கு முன்பு எப்படி பழக முடிந்தது?'' என கேள்வி எழுப்பி எதிர்ப்பை காட்டியுள்ளார். மெகபூபா முப்தி கூறுகையில், ''ஹிஜாப் தடை தொடர்பான உத்தரவு பிறப்பித்த கடிதத்தை நான் கண்டிக்கிறேன். காஷ்மீர், மற்ற மாநிலங்களை போன்றது அல்ல. தங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை எங்கள் பெண்கள் ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள்'' என்று கூறியுள்ளார்.

‛ஹிஜாப்’ அல்ல ‛நிகாப்’

‛ஹிஜாப்’ அல்ல ‛நிகாப்’

இதற்கிடையே சம்பவம் குறித்து ராணுவத்தின் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் எம்ரோன் முசாவி கூறுகையில், ‛‛சுற்றறிக்கையில் ‛நிகாப்'(கண்களை தவிர முகத்தை மறைக்கும்) என்பதற்கு பதில் ‛ஹிஜாப்'(தலையை மறைக்கும் வகையில் அணிவது) என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான பள்ளி. இதனால் ஆசிரியர்கள் கைகள், முக சைகைகளை பயன்படுத்தி கல்வி போதிக்க வேண்டும். ‛நிகாப்' அணிந்து கற்று கொடுப்பது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும்'' என கூறினார். இருப்பினும் அங்கு சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+