துவங்கி மூன்றே மாதத்தில் டார்ஜிலிங்கை கைப்பற்றிய குட்டி கட்சி! அதிர்ச்சியில் பாஜக, திரிணாமுல் காங்.!
கொல்கத்தா: திரிணாமுல், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளைத் தோற்கடித்து டார்ஜிலிங் நகராட்சியைக் கைப்பற்றி இருக்கிறது மூன்று மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட ஹம்ரோ கட்சி.
எந்த பின்புலமும் இல்லாமல் மூன்று மாதத்துக்குப் முன்பு தொடங்கப்பட்ட ஒரு கட்சி, தேசிய கட்சிகளையும், மாநிலத்தில் ஆளும் கட்சிகளையும் தோற்கடித்து, ஒட்டுமொத்த நகராட்சியையும் கைப்பற்றியது என்று சொன்னால் நம்ப முடியுமா. ஆனால், இது உண்மையில் நடந்திருக்கிறது.
கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. கொல்கத்தாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஹம்ரோ கட்சி.

கொல்கத்தா தேர்தல்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பிப்ரவரி 27ந் தேதியன்று 108 நகர்ப்புற இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வாக்குப் பதிவின்போது, ஆங்காங்கே வன்முறை மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் அரங்கேறின. ஆனால் தேர்தல் அமைதியாக நடந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியது.

வெற்றி
மேற்கு வங்கத்தில் உள்ள 108 இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேற்கு வங்காள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்றது. 108 நகராட்சிகளில் 102 இடங்களை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

டார்ஜிலிங்
ஆனால் டார்ஜிலிங் நகராட்சியில் மட்டும் முடிவுகள் வேறு விதமாக இருந்தது. டார்ஜிலிங்கில் உள்ள 32 இடங்களில், 18 இடங்களை முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் உள்ளூர் கட்சியான ஹம்ரோ கட்சி வென்று, டார்ஜிலிங் நகராட்சியை அக்கட்சி கைப்பற்றியது. இந்த ஹம்ரோ கட்சி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டிருக்கிறது. இக்கட்சியின் தலைவர் அஜோய் எட்வார்ட்ஸ் தோல்வியடைந்தார்.

ஹம்ரோ கட்சி
கோர்கா கட்சியில் இருந்தவர் அஜோய். அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த நவம்பர் மாதம் ஹம்ரோ என்ற கட்சியை தொடங்கினார். இந்த நகராட்சி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டனர். 32 வார்டுகளில் போட்டியிட்ட ஹம்ரோ கட்சியில், 19 பெண் வேட்பாளர்கள். மீதமுள்ளவர்கள், ஆசிரியர்கள், டூர் கெய்ட், ஆட்டோ டிரைவர்கள். இக்கட்சியின் தலைவர் அஜோய், டார்ஜிலிங்கில் சிறிய ஹோட்டல் நடத்தி வருகிறார். சாதாரண மக்களை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து, பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.

பாஜக
டார்ஜிலிங் நகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2 இடங்களை மட்டுமே வென்றது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் ஒரு நகராட்சியை வென்றன. டார்ஜிலிங்கில் தற்போது பாஜகவை சேர்ந்தவர்களே எம்.பி. ஆகவும் மற்றும் எம்.எல்.ஏ ஆகவும் உள்ளனர். இருந்தும் அக்கட்சியால் டார்ஜிலிங்கில் உள்ள 32 வார்டுகளில் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications