For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுல் மட்டுமல்ல... இதோ, இவர்களும் நாடாளுமன்றத்தில் தூங்கி ‘குறட்டை’ விட்டவர்கள் தான்!

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் நாட்டின் விலைவாசி உயர்வு பற்றிய விவாதத்தின் போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தூங்கினார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இப்படித் தான் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தூங்கியது என்று பாஜக விமர்சித்தது ஒருபுறம் இருக்க, அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல் ‘சிறிய விஷயத்தை பாஜக பெரிதாக்குகிறது' என காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

இந்நிலையில், ராகுலைப் போல் நாடாளுமன்றத்தில் தூங்கி சர்ச்சையில் சிக்கியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் யார்யார் என இதோ ஒரு பார்வை பார்க்கலாம்...

மன்மோகன் சிங்...

மன்மோகன் சிங்...

இதோ நெற்றியில் கை வைத்தபடி கண்களை மூடியவாறு முன்னாள் பிரதமர் தோன்றுவது கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தான். அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவரின் ‘குட்டித் தூக்கம்’...

குடியரசுத் தலைவரின் ‘குட்டித் தூக்கம்’...

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியும் நாடாளுமன்றத்தில் குட்டித் தூக்கம் போட்டுள்ளதாக நேரில் பார்த்த சில அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊடக கேமராக்கள் அதனை பதிவு செய்ய இயலவில்லை.

வீரப்ப மொய்லி....

வீரப்ப மொய்லி....

முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லியும் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு முறை நாடாளுமன்றத்தில் தூங்கியுள்ளார்.

பவன்குமார்...

பவன்குமார்...

முன்பொருமுறை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசிக் கொண்டிருந்த போது, முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தூங்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் சுக்லா...

ராஜீவ் சுக்லா...

ஐபிஎல் தலைவர் மற்றும் மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லாவும், குடியரசுத் தலைவர் பேசிக் கொண்டிருந்த போது தன்னையுமறியாமல் குட்டித் தூக்கம் போட்டவர் தான்.

போர் அடித்ததால்....

போர் அடித்ததால்....

ஒரு சமயம் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் அவ்வளவாக சுவாரஸ்யமற்றதாக இருந்தபோது, அதில் பங்கு பெறாமல் முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் சிறிது நேரம் அங்கேயே தூங்கினார்.

எழுப்பி விடுங்கப்பா...

எழுப்பி விடுங்கப்பா...

தனது நகைச்சுவை பேச்சுக்களால் மற்றவர்களை கவரும் லாலு பிரசாத் யாதவ் அடிக்கடி நாடாளுமன்றத்தில் தூங்கி மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துவர். கடந்த 2011ம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்த லாலுவை அப்போதைய சபாநாயகர் மீராகுமார் எழுப்பி விடச் சொன்ன காமெடியும் நடந்துள்ளது.

முலாயம் சிங்...

முலாயம் சிங்...

மூத்த அரசியல் தலைவரும், சமாஜ்வாடிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் நாடாளுமன்றத்தில் தூங்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தேவகவுடா...

தேவகவுடா...

பலமுறை நாடாளுமன்றக் கூட்டத்தில் தூங்கியவர் என்ற பெருமைக்குரியவர் முன்னாள் பிரதமரும், கர்நாடக முதல்வருமான தேவகவுடா.

வீர்பத்ரா சிங்...

வீர்பத்ரா சிங்...

இமாச்சல் பிரதேச முதல்வரான வீர்பத்ரா சிங் பலமுறை சட்டசபை நடந்த போது தூங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திக் விஜய் சிங்...

திக் விஜய் சிங்...

முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு அருகில் அமர்ந்தவாறு தூங்கி சமீபத்தில் செய்திகளில் வலம் வந்தார்.

ஆம் ஆத்மியின் சாதனை...

ஆம் ஆத்மியின் சாதனை...

49 நாட்களே டெல்லியில் ஆட்சி அமைத்த பெருமைக்குரிய ஆம் ஆத்மி கட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராக்கி பிர்லா, ஒருமுறை சட்டசபைக் கூட்டத்தில் தூங்கியது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப சந்தோஷம்...

ரொம்ப சந்தோஷம்...

பரேலி தொகுதி பாஜக எம்பியும், ஜவுளித்துறை மத்திய இணையமைச்சருமான சந்தோஷ் கேங்க்வார், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கையில் தூங்கியதாக சர்ச்சையில் சிக்கினார்.

ராகுல்காந்தி...

ராகுல்காந்தி...

இது நேற்று நாடாளுமன்றத்தில் தலையை வலது புறம் லேசாக சாய்த்தவாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தூங்குவதாக ஊடகங்களில் வெளியான புகைப்படம்.

நாட்டைக் கெடுத்ததுடன்...

நாட்டைக் கெடுத்ததுடன்...

மக்களாகிய நாமும் எண்ணற்ற கனவுகளோடு நமக்காகக் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், நமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் அனுப்பி வைக்கிறோம். ஆனால், அவர்கள் அங்கு போய் தூங்குகிறார்கள் என்பதைக் கேள்விப் படும் போது இந்த வரிகள் தான் மனதில் ஓடுகிறது, ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள், நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்....'

English summary
As the Congress Vice President Rahul Gandhi took a catnap during the price rise debate in the Lok Sabha on Wednesday, he drew huge criticism from all the opposition parties and became a centre of attention on all social media websites. Interestingly, Amethi MP Rahul Gandhi is not the only one who dozed off briefly in Parliament. There are many other seasoned politicians, who have taken a nap during parliamentary proceedings, given their hectic schedules. Here is a look back at all those "sleep-deprived" and yawning politicos who slept, ignoring the 'wary' camera, who caught them live while they were catching on some sleep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X