மிடில் ஆர்டரில் நடுக்கம்.. நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம்?
ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படாத நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் புதிய அணி நியூசிலாந்துக்கு அணியின் இந்திய சுற்றுப்பயண தொடரில் அருமையான தொடக்கத்தை கொடுத்துள்ளது.
கடைசி கட்டத்தில் ரன்களை விரட்டிய போது சற்று தடுமாறினாலும் மொத்தத்தில் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

இந்தியா வெற்றி
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து மற்றும் சுழல்பந்து சிறப்பாக இருந்தபோதிலும் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோவர் மிடில் ஆர்டர் பகுதியில் இந்திய அணி பேட்டிங் தட்டுத் தடுமாறுவது ஒரே ஒரு பிரச்சினையாக உள்ளது. உலக கோப்பையிலும் இதே பிரச்சினை இருந்தது.

எதிர்பார்ப்பு
இதன் காரணமாக இன்று ராஞ்சியில் நடைபெறும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அணியில் மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் இது தொடர்பாக சில முன்னணி ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால் கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்கள் இரண்டாவது போட்டியிலும் ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என கூறப்பட்டு இருக்கிறது.

சமநிலை தேவை
வீரர்களை மாற்றினால் அணி சமநிலையில் குழப்பம் ஏற்படும், முதல் போட்டியை போல, 2வது போட்டி செட் ஆகுமா என்பது தெரியாது. எனவே இந்த போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றி விட்டால் மூன்றாவது போட்டியில் விரும்பும் வகையில் அணியை மாற்றி அமைத்து பரீட்சாத்த முயற்சிகளில் ஈடுபடலாம் என்று அணி நிர்வாகம் கருதுகிறதாம்.

புத்துணர்ச்சி
உலக கோப்பை தோல்விக்கு பிறகு, இந்த தொடர் வெற்றி இந்திய அணிக்கு புத்துணர்ச்சியை பாய்ச்ச வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் முதல் தொடரிலேயே கோப்பையை கைப்பற்றியதாக இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் நினைப்பதால், வீரர்களில் எந்த மாற்றமும் இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.
Recommended Video

11 பேர் அணி
இதன்படி, ரோகித் சர்மா, ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேச அய்யர், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் , புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், முகமது சிராஜ் ஆகியோர் கொண்ட 11 பேர் கொண்ட அணி இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்தை சந்திக்கும் என்றுதான், எதிர்பார்ப்பு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications