ஏழை - பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்... ஆய்வில் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக அளவில், ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது என்று ஆய்வில் அதிர்ச்சிகர முடிவு கிடைத்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இது தொடர்பான ஆய்வில், உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு பிரச்சனை உள்ளது. அதை சரி செய்ய போதுமான நடவடிக்கைகள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் வறுமை உள்ளிட்ட சமூக சிக்கல்களை களைவதில் அரசு நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் தொலைநோக்குப் பார்வையில் இல்லதாவை. மிகக் குறுகிய கால நோக்கில், அரசியல் பிரமுகர்களின் லாபத்திற்காக மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், ஏழை-பணக்காரர் வேறுபாடுகள் மலிந்துள்ளது என்றும் ஆய்வு அதிர வைக்கிறது.

 நியூ ஆக்ஸ்பாம் ஆய்வு

நியூ ஆக்ஸ்பாம் ஆய்வு

உலக அளவில் பொருளாதார ஏற்றதாழ்வு அதிகம் உள்ள நாடுகள், அதை சரி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை குறித்து நியூ ஆக்ஸ்பாம் நிறுவனம் அதிரடி கள ஆய்வு நடத்தியது. சமூகச் செலவு, வரி மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான ஒவ்வொரு நாட்டின் அரசாங்க நடவடிக்கை குறித்து, கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 நியூ ஆக்ஸ்பாம் ஆய்வு

நியூ ஆக்ஸ்பாம் ஆய்வு

உலக அளவில் பொருளாதார ஏற்றதாழ்வு அதிகம் உள்ள நாடுகள், அதை சரி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை குறித்து நியூ ஆக்ஸ்பாம் நிறுவனம் அதிரடி கள ஆய்வு நடத்தியது. சமூகச் செலவு, வரி மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான ஒவ்வொரு நாட்டின் அரசாங்க நடவடிக்கை குறித்து, கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 இந்தியாவுக்கு 132 வது இடம்

இந்தியாவுக்கு 132 வது இடம்

பரபரப்பாக நடந்த இந்த ஆய்வில் இந்தியா 132 வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் மொத்தம் 152 நாடுகள் உள்ளன. அதில் மிக கடைசி வரிசையில் இந்தியா இருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 முதலிடத்தில் ஸ்வீடன், ஜெர்மனி

முதலிடத்தில் ஸ்வீடன், ஜெர்மனி

ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க் , நோர்வே மற்றும் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது. இந்த முடிவுகள் ஏழை பணக்காரர்கள் வேறுபாட்டை களைய விரும்பும் ஒரு நாட்டிற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம் என்கிறது ஒக்ஸ்பாம் ஆலோசனைக் குழு.

 ஒவ்வொரு பிரிவுக்கும் ரேங்க்

ஒவ்வொரு பிரிவுக்கும் ரேங்க்

இந்த ரேங்க் பட்டியல் 21 பிரிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனி ரேங்க் பட்டியல் வெளியிட்டுள்ளது ஒக்ஸ்பாம். சுகாதாரம் மற்றும் கல்வி செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் பங்கு, வரி விலக்குகள் பங்கு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மகப்பேறு நன்மைகள் குறித்தும் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

 சமூக பாதுகாப்பு மோசம்

சமூக பாதுகாப்பு மோசம்

சமூக செலவீனங்களில் இந்தியா 152 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வரி விதிப்பில் 91 வது இடமும் தொழிலாளர்கள் உரிமைகள் முக்கியத்துவத்திற்கு 86 வது ரேங்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. சுகாதார செலவீனம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது என இந்தியா குறித்து அந்த அறிக்கை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

 பெண்களுக்கு மரியாதை இல்லை

பெண்களுக்கு மரியாதை இல்லை

வரி அமைப்பு ஆவணங்களில், நியாயமான முற்போக்கானதாக, இந்தியா தோன்றுகிறது, ஆனால் நடைமுறையில் மிகவும் மோசம். அதே போல தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு மரியாதை வழங்குவது இந்தியாவில் மிக மோசமாக உள்ளது.

PM Modi demands for equal rights for women, slams 'Triple Talaq' | Oneindia News
 கட்டுப்பாடு மிகுந்த சந்தைக் கொள்கை

கட்டுப்பாடு மிகுந்த சந்தைக் கொள்கை

கட்டுப்பாடான தொழிலாளர் சந்தைக் கொள்கைகள் இந்தியாவில், உற்பத்தித் துறைக்கு தடையாக இருக்கும் காரணிகளில் முதன்மையானது. உள்நாட்டு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India ranks 132nd out of 152 countries on reducing inequality, the advocacy group Oxfam said on Monday.
Please Wait while comments are loading...