மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு செப்.14ல் அடிக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை-அகமதாபாத் நடுவேயான அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு வரும் 14ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

புதிய காலத்திற்கு ஏற்ப, பாதுகாப்பு, வேகம் மற்றும் நவீன சேவைகளை வழங்க உள்ளது புல்லட் ரயில். சர்வதேச அளவில் இந்தியாவின் ரயில்வே மதிப்பை உயர்த்த இந்த திட்டம் உதவும்.

India-Japan patnership on bullet trains to open gates of safety, speed and service

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபி ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் ரயில்வே துறையில் புது யுகம் பிறக்க உள்ளது.

ஜப்பான் அரசு இந்த திட்டத்திற்கு ரூ. 88,000 கோடியை வழங்க உள்ளது. வட்டி வெறும் 0.1 சதவீதம்தான். லோன் பெற்ற 15 வருடங்களுக்கு பிறகு அதை திருப்பித்தரும் நடவடிக்கையை இந்தியா துவங்கினால் போதும்.

புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்திய அரசு தனது நிதியில் இருந்து ஒரு பைசாவை கூட செலவிடப்போவதில்லை என்பதால் அரசுக்கு நிதி சுமை ஏற்படாது. திட்டத்தின் 80 சதவீத நிதி கடனாக கிடைத்துவிடும். இந்திய வரலாற்றில் ஒரு கட்டமைப்பு பணியை இந்த அளவுக்கு எளிமையாக மேற்கொள்ளப்போவது இதுதான் முதல் முறை.

கட்டுமான காலகட்டத்தில் சுமார் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கப்போகிறது இந்த திட்டம். ரயில் திட்டங்களில் பயிற்சி பெற்றவர்களுக்குத்தான் பணி வழங்கப்ப்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Narendra Modi and his Japnese counterpart Shinzo Abe will lay the foundation stone of the Mumbai-Ahmedabad High-Speed Rail project on September 14.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற