தனி மதமாக சித்தராமையா அறிவித்தாலும்.. எடியூரப்பாவுக்கே லிங்காயத்துகள் ஆதரவு.. பரபர சர்வே

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முதல்வராக சித்தராமையா செயல்பாடு எப்படி?

  பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தலில் லிங்காயத்துகளின் ஆதரவு பாஜக கட்சிக்கே அதிகம் என்று இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

  கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

  India Today Karnataka election survey: Lingayat gives support for Yeddyurappa over Siddaramaiah

  இந்த நிலையில் கர்நாடகா தேர்தல் குறித்து தற்போது இந்தியா டுடே கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு கருத்து கணிப்புகள் செய்யப்பட்டுள்ளது. அதோடு லிங்காயத்துகள் தனி மத அறிவிப்பு எப்படி இருக்கிறது என்றும் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் சித்தராமையா லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரித்தார்.

  ஆனால் சர்வேயின் படி லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்த பிறகும் எடியூரப்பாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். லிங்காயத்து ஜாதியினரில் 39 சதவீதம் எடியூரப்பாவுக்கு ஆதரவு. 23 சதவீதம் லிங்காயத்துகள் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  குமாரசாமிக்கு 17 சதவீதம் லிங்காயத்துகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜகவின் முக்கிய வாக்கு வங்கி லிங்காயத்து ஜாதி பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  India Today Karnataka releases election survey. Lingayat gives support for Yeddyurappa over Siddaramaiah.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற