ஹமீத் அன்சாரி பதவிக்காலம் முடிகிறது.. புதிய துணை ஜனாதிபதி சாய்ஸ் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பதவியிடத்திற்கு யாரை முன்னிருத்துவது என்ற பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை ஹமீத் அன்சாரி பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது. எனவே இம்முறை அதை பாஜக அரசு செய்யாது என கூறப்படுகிறது.

Is this man the next vice president of India?

அந்த பதவியிடத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஹுகும்தேவ் நாராயண் யாதவ், பாஜகவின் சாய்ஸ் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தின் மதுபானி தொகுதியின் பாஜக எம்.பியாக உள்ள இவர், முன்னாள் அமைச்சருமாவார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஜாதியை சேர்ந்தவர் என்பது பாஜக விருப்பத்திற்கு காரணம். பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை தனது பலமான வாக்கு வங்கியாக பாஜக மாற்றிக்கொண்டிருக்கும், இந்தசூழலில், பாஜக இம்முடிவை எடுத்துள்ளது.

1993ல் பாஜகவில் இணைந்த, யாதவ், வாஜ்பாய் அரசில் விவசாயம், போக்குவரத்து மற்றும் கப்பல் துறையில் பணியாற்றினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The term of the vice president will end this year and the BJP has already started discussing who the next person would be. There has been a name in circulation for sometime and according to sources, Hukumdev Narayan Yadav could be a front-runner to the post of vice president.
Please Wait while comments are loading...