For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் வலம் வரும் ‘அம்மா’இலவச கிரைண்டர், மிக்சிகள்... ஜஸ்ட் ரூ 1400க்கு விற்பனை

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக அரசு வழங்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர், டேபிள் பேன் போன்றவை டெல்லியில் விலைக்கு கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது தேர்தல் வாக்குறுதிப் படி இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் பேன் போன்றவற்றை தமிழகத்தில் அதிமுக அரசு வழங்கி வருகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில் இவை அனைத்தும் ஒரு வீட்டின் அத்தியாவசியப் பொருட்கள் என்பதால் இவை இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.

ஆனாலும், அரசு இலவசமாக தரும் எதையும் வேண்டாம் எனச் சொல்ல மனம் வராத நமது மக்கள் அவற்றை வாங்கி தேவைப் படுபவர்களுக்கு குறைந்த விலையில் விற்று விடுகிறார்களாம். அதிலும் இம்முறை அம்மாவின் இலவசப் பொருட்கள் மாநிலம் கடந்து விற்பனையாவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போ கலர் டிவி... இப்போ கிரைண்டர்

அப்போ கலர் டிவி... இப்போ கிரைண்டர்

தமிழகத்தில் அரசால் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் எல்லாம் டெல்லியில் விலை வைத்து விற்கப் படுகிறது. முன்பு இப்படித்தான் திமுக அரசு வழங்கிய இலவச கலர் டிவியை விற்று வந்தனர். இப்போது ஜெயலலிதா அரசு தரும் இலவசங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

விலையும் குறைவு....

விலையும் குறைவு....

பொதுவாக கம்பெனி கிரைண்டர் குறைந்தபட்சம் ரூ 2000கு மேல் சந்தையில் விற்பனையாகிறது. ஆனால், அம்மா டேபிள்டாப் வெட் கிரைண்டர் ரூ. 1400க்கு விற்பனையாகிறதாம். இந்த விலை கொடுத்து இதை வாங்கியதாக சுமதி என்ற இல்லத்தரசி கூறுகிறார்.

போலி ரேஷன் கார்டுகள்....

போலி ரேஷன் கார்டுகள்....

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால் இவ்வாறு இலவசப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் போலி ரேஷன் கார்டுகள் மூலம் அதிக அளவில் இலவசப் பொருட்களை வாங்கியவர்கள் எனக் கூறப்படுகிறது.

வெளிமாநிலங்களில் விற்பனை...

வெளிமாநிலங்களில் விற்பனை...

குறிப்பாக வெளிமாநிலங்களுக்குக் கொண்டு போய் இதை விற்கின்றனர். இதில் சுமதி மதுரையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரிடமிருந்து வாங்கினாராம் கிரைண்டரை.

வியாபாரிகளாகும் மக்கள்...

வியாபாரிகளாகும் மக்கள்...

இதுகுறித்து சுமதி கூறுகையில், அந்த வீரர் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தார். அப்போது தனது வீட்டில் 3 கிரைண்டர்கள் இருப்பதைப் பார்த்தார். சும்மாதானே கிடக்கிறது என்று கருதி அவற்றை எடுத்து வந்து விற்றார் என்றார்.

கிரைண்டருக்கு கேரண்டி....

கிரைண்டருக்கு கேரண்டி....

மேலும் அவர் கூறுகையில், அந்த கிரைண்டர் நன்றாக இருப்பதைப் பார்த்து இப்போது எனது அலுவலகத்தில் இருப்போரும் அதுபோல வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளனர் என்றார்.

அப்போ கூட அப்டித்தான்...

அப்போ கூட அப்டித்தான்...

முன்பு கருணாநிதி அரசு வழங்கிய இலவச கலர் டிவியை ரூ. 1000 முதல் 2000 வரை கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி நிச்சயம்...

வெற்றி நிச்சயம்...

இந்த இலவசத் திட்டங்கள் குறித்து சென்னையைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ராமநாதன் சுவாமிநாதன் கூறுகையில், திமுக அரசு, அனைத்து வீடுகளிலும் டிவி பார்க்கும்போது தங்களது ஞாபகம் வர வேண்டும் என்று நினைத்தது. ஜெயலலிதா ஒரு படி மேலே போய், அனைத்து இல்லத்தரசிகளின் மனதையும் கவர நினைத்தார். அதில் அவர் வென்றுள்ளார். நிச்சயம் அவருக்கு இது வருகிற தேர்தலில் கை கொடுக்கும் என்றார்.

தர்மபுரி தயாரிப்பு...

தர்மபுரி தயாரிப்பு...

தமிழக அரசு இலவசமாக வழங்கும் வெட் கிரைண்டர்கள், கோவை மற்றும் தர்மபுரியில் தயாரிக்கப்பட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

ஆச்சர்யம் ஆனால் உண்மை....

ஆச்சர்யம் ஆனால் உண்மை....

டெல்லியில் தற்போது ஒரு நல்ல டேபிள் டாப் கிரைண்டர் வாங்க வேண்டுமானால் குறைந்தது ரூ. 4000 முதல் 5000 வரை செலவிட வேண்டி வரும். ஆனால் அம்மா கிரைண்டர் ரூ. 1500க்குள் கிடைப்பது டெல்லி மக்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அம்மா திட்டங்கள்...

அம்மா திட்டங்கள்...

ஏற்கனவே தமிழக பெருநகரங்களில் அம்மா உணவகங்கள் மூலம் ஒரு ரூபாய்க்கு இட்லி, 3 ரூபாய்க்கு விதம் விதமான சாதம், இரவு சப்பாத்தி ஆகியவை மக்களைக் கவர்ந்துள்ளன. அதேபோல அம்மா மலிவு விலை காய்கறிக் கடையும் மக்களைக் கவர்ந்த திட்டங்களில் ஒன்று என்பது நினைவிருக்கலாம்.

English summary
Amma Table-Top Wet Grinder (ATTWG) has made its maiden appearance in Delhi. In Tamil Nadu, it's a freebie, one of many, including mixies and table fans, with which Tamil Nadu chief minister J Jayalalithaa hopes to make it to 7RCR. But the ATTWG that arrived in Delhi within days of Amma announcing her PM ambitions has come for a price. Delhi housewife Sumathi paid Rs1,400 for the contraption that makes idli-making a piece of cake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X