For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் பேய் மழை: 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்; 160 பேர் பலி

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 160 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் அங்கு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரால் 2 ஆயிரத்து 500 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 450 கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

இந்த மழை, வெள்ளத்திற்கு இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டார். அவருக்கு ஜம்மு காஷ்மீ்ர் முதல்வர் உமர் அப்துல்லா நிலைமையை விளக்கிக் கூறினார்.

மாநில மக்களின் பாதுகாப்பும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதும் தான் தனது முக்கிய வேலை என்று உமர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார்.

Jammu & Kashmir facing ‘worst flood in 60 years’, death toll touches 160

ஜம்முவில் மட்டும் 1,000 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 50 பாலங்கள், நூற்றுக்கணக்கான கிமீ அளவில் சாலைகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை ராணுவ வீரர்கள் மீட்டு வருகிறார்கள். ராணுவ வீரர்கள் இதுவரை 7 ஆயிரம் பேரை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 நாட்களில் பெய்த மழையால் ஜம்மு காஷ்மீர் திணறி வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அம்மாநில மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

English summary
The death toll in the Jammu & Kashmir floods has risen to 160 as the floods, the worst the state has seen in 60 years, affected a staggering 2,500 villages, Union home minister Rajnath Singh on Saturday said as he assured help to deal with the grim situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X