நிதிஷ் கட்சியிலும் கலகக் குரல்- 5 எம்.பிக்கள் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து 5 எம்.பி.க்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ஜெய்நாராயண் நிஷாத், பூர்ணமாசி ராம், சுஷில்குமார் சிங், மங்கானி லால் மண்டல் ஆகிய எம்.பிக்களும் ராஜ்யசபா எம்.பியுமான ஷிவானந்த் திவாரி ஆகியோர் அக் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா, மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடன் நெருக்கமான போக்கை கடைபிடித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில்தான் பீகார் மாநிலத்தில் லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா எம்.எல்.ஏக்கள் 13 பேர் ஐக்கிய ஜனதா தளத்துக்கு தாவியதாக பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 9 எம்.எல்.ஏக்கள் அதை மறுத்திருந்தனர்.

இந்நிலையில் பீகாரின் மற்றொரு ஐக்கிய ஜனதா தள கட்சியிலும் கலகக் குரல் எழுந்துள்ள அம்மாநில அரசியல் களத்தை அனல் பறக்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+