For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

FAIL, END, NO... நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கம் தந்த தன்னம்பிக்கை நாயகன்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆங்கிலத்தில் எதிர்மறையாக பொருள் தரும் fail, end, no போன்ற வார்த்தைகளுக்கு, தனது ஸ்டைலில் தன்னம்பிக்கையாக விளக்கம் தந்தவர் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

இளைய சமுதாயத்தை கனவு காணச் சொன்ன மக்கள் ஜனாதிபதி கலாமின் மரணம், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்களையும் துக்கமடையச் செய்துள்ளது. இவ்வளவு இதயங்களைக் கொள்ளை கொள்ள அவரது தன்னம்பிக்கை வார்த்தைகளும் முக்கியக் காரணம்.

அந்த வகையில், ஆங்கிலத்தில் தோல்வி, முடிவு, இல்லை என்ற எதிர்மறை பொருள் தரும் வார்த்தைகளுக்கு கூட தன்னம்பிக்கையாக புதிய விளக்கம் அளித்தவர் தான் கலாம்.

கற்றுக் கொள்ள முதல் வாய்ப்பு...

கற்றுக் கொள்ள முதல் வாய்ப்பு...

FAIL என்ற வார்த்தைக்கு (first Attempt In Learning) என, அதாவது ‘கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு' என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முயற்சிகள் தோற்பதில்லை...

முயற்சிகள் தோற்பதில்லை...

இதேபோல், END என்பதற்கு ‘Effort Never Dies என கலாம் விளக்கமளித்துள்ளார். அதாவது ‘முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை' என்பது அதன் பொருளாகும்.

அடுத்த வாய்ப்பு...

அடுத்த வாய்ப்பு...

NO என்ற வார்த்தைக்கு Next Opportunity, அதாவது ‘அடுத்த வாய்ப்பு' என விளக்கமளித்து வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியவர் தான் கலாம்.

தன்னம்பிக்கை நாயகன்...

தன்னம்பிக்கை நாயகன்...

இது போன்று இன்னும் எத்தனையோ தன்னம்பிக்கை கருத்துக்களை தனது உரைகளிலும், தனது நூலிலும் வெளிப்படுத்தியவர் தான் கலாம். அதனாலேயே இளைய சமுதாயம் தங்கள் வழிகாட்டியாக கலாமை ஏற்றுக் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

English summary
The former president Kalam who is a active and positive person gave positive meaning for negative words.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X