கர்நாடக தேர்தல்: ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட வாய்ப்பளிக்காத பாஜக.. ராஜ்நாத் சொல்லும் அடடே காரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடக தேர்தல்: ராஜ்நாத் சொல்லும் அடடே காரணம்!- வீடியோ

  பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டு இருக்கும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இடம்பெறவில்லை. அதேபோல் இரண்டிலும் கிறிஸ்துவர்கள் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

  மொத்தம் 225 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி லிங்காயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மொத்தம் 40 லிங்காயத்து வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 25 வோகாலிகா வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 15 முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 15 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். 5 பிராமின்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  பாஜகவும் லிங்காயத்துகளுக்கு ஆதரவு

  பாஜகவும் லிங்காயத்துகளுக்கு ஆதரவு

  பாஜக வேட்பாளர் பட்டியலிலும் லிங்காயத்துகள் அதிக அளவில் இடம்பெற்று இருக்கிறார்கள். மொத்தமாக 72 பேரில் லிங்காயத்துகள் 21 பேர் இடம்பெற்றுள்ளனர். லிங்காயத்துகளுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தனி மத அங்கீகாரம் கொடுத்தது. இதனால் அந்த ஓட்டுக்களை காங்கிரஸ் பெறும் என்று கூறப்படுகிறது.

  முஸ்லிம்கள் இல்லை

  முஸ்லிம்கள் இல்லை

  பாஜக வெளியிட்டு இருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை. முதற்கட்ட பட்டியலில் 72 வேட்பாளர்கள் பெயர் இருந்தது. அதன்பின் 82 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிடப்பட்டு இருக்கிறது. இரண்டிலும் ஒரு முஸ்லிம் கூட இல்லை. அதேபோல் இரண்டிலும் கிறிஸ்துவ, ஜெயின் வேட்பாளர்களும் இல்லை.

  யாருக்கு முக்கியத்துவம்

  யாருக்கு முக்கியத்துவம்

  பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் லிங்காயத்துகள் 21, 10 தாழ்த்தப்பட்ட மக்கள் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். 10 வோகலிகாஸ், 19 பிறப்படுத்தப்பட்ட மக்கள், 5 பிராமணர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 32 லிங்காயத்துகள், 10 வோகலிகாஸ், 20 பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.

  காரணம் என்ன

  காரணம் என்ன

  இது கர்நாடகாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் ராஜ்நாத் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், வெற்றிபெற கூடிய ஆட்களை மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது தேர்தல் சமயத்தில் எல்லோருக்கும் புரியும் என்றுள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Bharatiya Janata Party (BJP) on Monday released its first and second list of BJP candidates. No Muslim or Christian has given chance in the list.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற