For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்' புரட்சியை தொடர்ந்து தலித், ஹரிஜன் வார்த்தைகளுக்கும் தடை விதித்த கேரளா

தலித் மற்றும் ஹரிஜன் என்ற வார்த்தைகளை பயன்படுத்த கேரள அரசு தடை விதித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தலித் மற்றும் ஹரிஜன் என்ற வார்த்தைகளை அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த கேரளா அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான கேரள மாநில ஆணையத்தின் தலைவர் நீதிபதி பிஎன் விஜயகுமார் உத்தரவின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கீழாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kerala government bans usage of words like Dalit, Harijan

கடந்த 2008-ஆம் ஆண்டே அரசு செய்திக் குறிப்புகளில் தலித் மற்றும் ஹரிஜன் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை விடுக்கப்பட்டது. இந்த வார்த்தைகளால் சமூக புறக்கணிப்பு மட்டுமே ஏற்படும் என்றும் ஒரு தேசம் என்ற உணர்வை சிதைக்கும் என்றும் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட வார்த்தைகளை பயன்படுத்த கேரள மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

English summary
Kerala government bans to use words like Dalit and Harijan in its official communications.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X