ஃபுல் போதையில் கார் ஓட்டிய பெண்... தடுத்த போலீசுக்கு தாறுமாறாக முத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் ஒருவர் இரவு நேர பார்டியில் பங்கேற்று விட்டு முழு போதையில் தனது காரில் வீடு திரும்பினார்.

மது போதை தலைக்கு ஏறியதால் அவரால் தனது காரை ஒழுங்காக ஓட்ட முடியவில்லை. தாறுமாறாக வண்டி ஓடியது. கொல்கத்தாவின் உப்பு ஏரி அருகே கிழக்கு மெட்ரோபாலிட்டன் சாலையில் வந்துகொண்டிருந்த பெண், காரை ஓட்டும்போதே மயக்க நிலைக்குச் சென்றார் அந்தப்பெண்.

Kolkata drunk woman kisses policeman after being caught

பெண்ணின் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென தடுப்பு சுவர் மீது மோதியது. அருகில் இருந்த டாக்ஸி டிரைவர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அப்பெண் டிரைவரை பிடித்துத் தள்ளிவிட்டார்.

அப்போது, போலீஸ் ஒருவர் அப்பெண்ணையும் அவரது நண்பரையும் காரில் இருந்து இறக்க முயற்சி செய்தபோது, அப்பெண் திடீரென போலீசை தன் பக்கம் இழுத்து தாறுமாறாக முத்தம் கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்தாலும் காவலர் கடமை தவறவில்லை. கண்மூடித்தனமாக வண்டி ஓட்டிய குற்றத்திற்காக அப்பெண் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kolkata Drunk woman started kissing a policeman after being caught for rash driving , police said.
Please Wait while comments are loading...