தண்ணீரை தேடி நள்ளிரவில் கூட்டம் கூட்டமாக குஜராத் நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் சிங்கங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜூனாகத்: குஜராத் நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேடி கூட்டமாக சிங்கங்கள் உலவியதால் அப்பகுதியில் பயணம் மேற்கொண்ட வாகன ஓட்டிகள் கடும் பீதியில் உறைதனர்.

இந்தியாவிலேயே சிங்கங்கள் வசிப்பிடங்களாக இருப்பவை குஜராத்தின் கிர் வனப்பகுதிகள்தான். பிற இடங்களில் உயிரியல் பூங்காங்களில்தான் சிங்கங்கள் உள்ளன.

Lions roaming in Gujarat NH, people get panic

குஜராத்தின் ஜூனாகத், ராஜூலாவில் கிர் வனப்பகுதிகள் உள்ளன. இதில் ராஜூலா நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் சென்று சென்றுகொண்டிருக்கும் போது திடீரென 10, 15 சிங்கங்கள் தங்களது குட்டிகளுடன் தண்ணீர் கேட்டு மறியல் போராட்டம் நடத்துவது போல வரிசை கட்டி வந்தன.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனால் சாலையை கடக்கும் வரை காத்திருந்த வாகன ஓட்டிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

குஜாராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை சுற்றியுள்ள சாலை என்பதால் சிங்கங்கள் தண்ணீர் தேடி வந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lions from Gir forest roaming in Gujarat National highways. Motorist who travel in that way gets panic.
Please Wait while comments are loading...