For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமானில் நவ.7ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

அந்தமான் கடற்பகுதியில் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி:அந்தமான் கடற்பகுதியில் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    அந்தமான் கடற்பகுதியில் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    சென்னையில் மழை அளவு அதிகம்

    சென்னையில் மழை அளவு அதிகம்

    சென்னையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை 93 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    பலத்த மழைக்கு வாய்ப்பு

    பலத்த மழைக்கு வாய்ப்பு

    இதனிடையே வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பல இடங்களில் பலத்த கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தமானில் காற்றழுத்த தாழ்வு

    அந்தமானில் காற்றழுத்த தாழ்வு

    நவம்பர் 7ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அந்தமான் நிகோபர் தீவுகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    வெள்ளச்சேதம் அதிகமாகுமோ?

    வெள்ளச்சேதம் அதிகமாகுமோ?

    சென்னையில் கடந்த ஞாயிறு முதல் விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழையால் புறநகர் பகுதிகள் 5 நாட்களாக வெள்ளத்தில் மிதக்கின்றன. வெயிலடித்தால் மட்டுமே தண்ணீர் வடிய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 7 முதல் மழை நீடித்தால் புறநகரில் பல பகுதிகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளது.

    English summary
    The low pressure area over southwest Bay of Bengal and adjoining Sri lanka area is likely to develop over Andaman Sea around 7th November.This, too, is forecast to enter the Gulf of Thailand enroute to the Andaman Sea, but would lose momentum since the predecessor would still be engaged in an elaborate landfall over the Andhra Pradesh coast around November 7.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X