For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பால் தாக்கரே: பேஸ்புக் விமர்சனத்துக்காக கைதான மாணவிகளுக்கு நஷ்ட ஈடு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக்கில் சிவசேனை தலைவர் பால்தாக்ரே குறித்து அவதூறு செய்தியை பதிவிட்டதாக கல்லூரி மாணவிகள் இருவரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்திருந்தனர். இது கருத்துரிமைக்கு எதிரானது என்று கூறியுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை மகாராஷ்டிரா அரசு அபராதமாக அளிக்க வேண்டும், அப்படி அளிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ளது.

பால்தாக்ரே மறைவால் பந்த்

சிவசேனாவின் தலைவராக இருந்த பால்தாக்ரே இறந்தபோது, மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் அக்கட்சியினர் போராட்டங்கள், பந்த் நடத்தினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பந்த்தால் பாதிக்கப்பட்டனர்.

பேஸ்புக்கில் எதிர்ப்பு

இந்த பந்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேஸ்புக்கில் மாணவி ஒருவர் கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் மறைந்த தலைவர் மீதான மரியாதையை காண்பிக்க பந்த் நடத்துவது சரியான வழிமுறை கிடையாது. தாக்ரே மீதான மரியாதை காரணமாக கடைகள் மூடப்படவில்லை. பயத்தின் காரணமாகவே கடைகள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.

மாணவிகள் கைது

இந்த கருத்துக்கு அவரின் தோழி 'லைக்' போட்டிருந்தார். இதை பார்த்த சிவசேனை கட்சியின் பால்கார் வட்ட நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து கல்லூரி மாணவிகளான இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மனித உரிமை ஆணையம் விசாரணை

இந்த கைதுக்கு எதிர்ப்பு வலுத்த பிறகு மகாராஷ்டிரா அரசு வழக்கை முடித்துக்கொண்டது. இருப்பினும் மாணவிகளின் மன உளைச்சலை கருத்தில்கொண்டு தேசிய மனித உரிமை ஆணையம் இதுகுறித்த விசாரணையை தானாக முன்வந்து எடுத்து நடத்தி வந்தது. விசாரணையின்போது மாணவிகள், மத, இன உணர்வுகளுக்கு எதிராக கருத்து பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாராஷ்டிர போலீசார் அதிகப்படியான ரியாக்ஷனை காண்பித்துள்ளனர். இதற்கு அம்மாநில அரசுதான் பொறுப்பாகும். இந்த நடவடிக்கை, அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

ரூ.50 ஆயிரம் ஃபைன்

பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை அபராதமாக மகாராஷ்டிர அரசு கொடுக்க வேண்டும். அல்லது, 1993ம் ஆண்டு மனித உரிமைகள் சட்டத்தின் 13வது பிரிவின்கீழ் விளைவுகளை அந்த அரசு சந்திக்க வேண்டிவரும்.

English summary
The National Human Rights Commission on Tuesday directed Maharashtra Government to pay Rs 50,000 each to the two girls who were arrested over a Facebook post after the death of Shiv Sena chief Balasaheb Thackeray, saying their detention was "illegal".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X