For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் நாடு முன்னேறும்: மம்தா பானர்ஜி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இளைஞர்கள் உறுதியான அர்ப்பணிப்புடன் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி.

கொலகத்தாவில் தியாகிகள் நாளையொட்டி பரேட் மைதானத்தில் நடந்த பேரணியை தொடங்கி வைத்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த் பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-

Mamata asks youth to join politics

நாட்டின் முன்னேற்றதுக்காக இளைஞர்கள் உறுதியான, அர்ப்பணிப்புடன் அரசியலுக்கு வரவேண்டும். நான் இளைஞர்களிடம் கேட்கிறேன். மாநிலத்தில் உள்ள மாணவர் சங்கங்களிடம் கேட்கிறேன். நீங்கள் முன்னாள் வாருங்கள் இந்தியாவிற்காக மேற்குவங்காளத்திற்கு பாடுபடுங்கள்.

இளைஞர்களே நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். நீங்கள் உறுதியான, தைரியமானவர்கள், நீங்கள் அர்ப்பணிப்புடன் ஒழுக்கமுடன்,உறுதியாக உலகில் போராட வேண்டும்.அர்ப்பணிப்பு ஒழுக்கம் உறுதி உள்ள மாணவ மாண்வியர்களால் தான் புதிய மேற்கு வங்காளத்தை, புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.

உங்களை எனது மகன்களாக, மகள்களாக பார்க்கிறேன் உங்களால் தான் மாநிலத்தை உயர்த்த முடியும்' என இவ்வாறு அவர் கூறினார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee Thursday called for “determined” and “dedicated” participation of youth from the state to bring about a change and work for the country’s progress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X