மணிப்பூரில் மாஸ் காட்டும் பாஜக.. சற்றே மங்கிய காங்கிரஸ்.. ZEE NEWS கருத்துக்கணிப்பு முடிவுகள்
இம்பால் : மணிப்பூர் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 32 முதல் 38 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 12 முதல் 17 இடங்களை பெறும் என ஜீ நியுஸ் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 இடங்கள் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 36.2% வாக்குகளுடன் 21 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 35.1% வாக்குகளுடன் 28 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 7.1% வாக்குகளும், தேசிய மக்கள் கட்சி 5% வாக்குகளும் பெற்றது.

மணிப்பூர் தேர்தல்
இந்நிலையில் 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 78.03 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இரண்டாவது கட்டமாக 78.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பாஜக பலம்
மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் zee நியூஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி மீண்டும் பாஜகவே மணிப்பூரில் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது. அதன்படி, மாநிலத்தில் மொத்தமாக பதிவான வாக்குகளில் பாஜக 39 சதவீத வாக்குகளை பெறும் என கணித்துள்ளது

காங்கிரஸ் சறுக்கல்
அடுத்ததாக காங்கிரஸ் கூட்டணி 30 % வாக்குகளையும், நாகலாந்து மக்கள் முன்னணி 9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதேபோல் தேசிய மக்கள் கட்சி 6 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. மற்றவை 16 சதவீத வாக்குகளை பெறுவர் என கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக பெரும்பான்மை
மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 32 முதல் 38 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 12 முதல் 17 இடங்களையும், நாகலாந்து மக்கள் முன்னணி 3 முதல் 5 இடங்களையும், தேசிய மக்கள் முன்னணி 2 முதல் 4 இடங்களை கைப்பற்றும் எனவும், மற்றவை 2 முதல் 5 இடங்களில் வெற்றி பெரும் என இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications