For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில்... கொத்து, கொத்தாக இறந்து விழுந்த காகங்கள்... பீதியில் உறைந்த மக்கள்!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் ராடி என்னும் பகுதியில் திடீரென கொத்து, கொத்தாக காகங்கள் இறந்து விழுந்தன. பறவை காய்ச்சல் காரணமாக அந்த காகங்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அரசு அதிகாரிகள் குழுவினர் இறந்து போன காகங்களின் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது.

many Crows die suddenly in Rajasthan

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் ராடி என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பறந்து திறந்த ஏராளமான காகங்கள் திடீரென கொத்து, கொத்தாக உயிரிழந்து விழுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். பறவை காய்ச்சல் காரணமாக அந்த காகங்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

மேலும், அந்த பகுதியில் உள்ள கோழி பண்ணைகள் மற்றும் கோழி இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.சிறப்பு அரசு அதிகாரிகள் குழுவினர் இறந்து போன காகங்களின் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். கோழிப்பண்ணைகளில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கபப்ட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்இந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்

கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அழிக்கப்படும் கோழிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்று ஜலாவர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

English summary
In Rajasthan's Jhalawar district, in a place called Radi, a large number of crows suddenly fell dead. The crows are said to have died of bird flu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X