டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் மக்கள் அவர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர்.

மியான்மரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் 230 பேர் டெல்லியில் உள்ள கலிந்தி கஞ்ச் பகுதியில் இருக்கும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Massive fire broke out in Rohingya refugee camp in Delhi

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நல்ல வேளையாக யாரும் உயிர் இழக்கவில்லை. விகாஸ் குமார் என்பவருக்கு மட்டும் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகதிகள் முகாமில் சுமார் 47 குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த முகாம் துவங்கப்பட்ட 6 ஆண்டுகளில் இது 4வது தீ விபத்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தில் அகதிகள் தங்களுக்கு ஐ.நா. அளித்த சிறப்பு விசா, அடையாள அட்டை, மியான்மரில் உள்ள தங்கள் சொத்து பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்துவிட்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Massive fire broke out in the refugee camp in southeast Delhi’s Kalindi Kunj area on sunday. 47 families of Rohingyas who stay in that camp have lost their ID cards, special visas given by United Nations and other important documents.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற