For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா என்ன ஒரு பூரிப்பு மோடி முகத்தில்.. அப்போ, 'ஓகேயாகிவிட்டதா?'

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி- வீடியோ

    டெல்லி: ஆகா என்ன ஒரு ஆச்சரியம் என்று அதிசயித்து நிற்கிறார்கள் டெல்லி நிருபர்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்த பிரதமர் மோடி முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.. சந்தோஷம், நிலவியது என்பது தான் இதற்கு காரணம்.

    இந்த முகமலர்ச்சி என்பது வழக்கத்திற்கு மாறானது என்பதை டெல்லி நிருபர்கள் கவனிக்க தவறவில்லை.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ முறை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். அது குறித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கும் இன்றைய எடப்பாடியுடனான, மோடியின் சந்திப்புக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த புகைப்படம் காட்டிவிடுகிறது.

    [மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சேலத்தில் ராணுவ தளவாட ஆலை.. மோடியிடம் எடப்பாடி வலியுறுத்தியது என்ன?]

    இறுக்கமாக இருப்பார்

    இறுக்கமாக இருப்பார்

    வழக்கமாக பிரதமர் மோடி, இறுக்கமான முகத்துடன்தான் இந்த தலைவர்களை சந்தித்து உள்ளதை நாம் பெரும்பாலான புகைப்படங்களில் பார்த்துள்ளோம். அல்லது, அதிகார தோரணையுடன் மோடி அமர்ந்திருப்பது போல போட்டோக்கள், இருக்கும். ஆனால் இன்றைய புகைப்படம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

    சிரிப்பின் சூட்சுமம்

    சிரிப்பின் சூட்சுமம்

    வெகு நாட்கள் கழித்து தனது மாணவரை சந்திக்கும் ஒரு ஆசிரியர், கடந்த கால நகைச்சுவை ஒன்றை நினைவு படுத்திக் கொண்டு சிரிப்பது போலவும், அதைக் கேட்ட மாணவர் அதிகமாக சிரித்து விட்டாலும் ஆசிரியருக்கு மரியாதை குறைவாக விடும், சிரிக்காமல் விட்டாலும் ஆசிரியருக்கு அது அவமரியாதை என்பதால் அளந்து சிரிப்பது போன்ற ஒரு சிரிப்பு எடப்பாடி பழனிச்சாமி முகத்தில் உள்ளது. அந்த ஆசிரியரின் தனித்துவ சிரிப்பு மோடியிடம் உள்ளது.

    என்ன காரணம்

    மோடியின் இந்த மகிழ்ச்சிக்கு, என்ன காரணம் என்று டெல்லி வட்டாரத்தில் கேட்டபோது, வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஒப்புக்கொண்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கூட்டணி

    கூட்டணி

    மோடியுடனான சந்திப்பு பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுப்பிய போது, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தேர்தல் வரும்போது அது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழக கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்துவிட்ட நிலையில், தமிழகத்தை ஆளும் அதிமுக தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம் என்று சூசகமாக சொல்லி உள்ளதற்கும், மோடியின் அந்த சிரிப்புக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

    English summary
    Modi express his pleasure when he met Edappadi Palanisamy at Delhi on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X