For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்திய குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தினார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தினார்.

ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் என்று இது அழைக்கப்படுகிறது. பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் உலகில் உள்ள பல மருத்துவ நிறுவனங்கள் இதை வரவேற்றுள்ளது.

எவ்வளவு வரும்

எவ்வளவு வரும்

இதன் மூலம் இந்தியா முழுக்க மொத்தம் 10 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் ரூபாய் வரை ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு அளிக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே இதேபோல் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே பெரியது

உலகிலேயே பெரியது

இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒபாமா மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அடிப்படையாக வைத்து இந்த திட்டம் இப்போது கொண்டது வரப்பட்டுள்ளது. இதை ''மோடி-கேர்'' என்றும் அழைக்கிறார்கள்.

என்ன பிரிவு

என்ன பிரிவு

இதில் 10 கோடி குடும்பம் மூலம் மொத்தம் 50 கோடி மக்கள் வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. அதிகமாக கிராமத்து மக்கள் பயன் பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிராமத்தில் 8.03 கோடி குடும்பமும், நகரங்களில் 2 கோடி குடும்பமும் இதன் மூலம் பயனடையும்.

எப்படி செய்ய வேண்டும்

எப்படி செய்ய வேண்டும்

இந்த திட்டத்தில் பயன பெற சில அடிப்படை வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக தனி இணையதள பக்கம் உருவாக்கப்பட உள்ளது. மொத்தமாக் 8,735 மருத்துவமனைகள் இதில் இப்போது வரை இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்,

English summary
PM Modi inaugurates Ayushman Bharat Health Scheme in Ranchi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X