For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு விசா: "அது வேற வாயி.. இது நாற வாயி" ரேஞ்சுக்கு விளக்கம் தந்த கெர்ரி!

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவருக்கு விசா வழங்க மறுக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வித்தியாசமான விளக்கமளித்துள்ளார்.

இருநாட்டு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி. நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை ஜான் கெர்ரி சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, சுஷ்மா சுவராஜூடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜான் கெர்ரி. அப்போது பிரதமர் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது தொடர்பான வினா எழுப்பப்பட்டது.

அதற்கு ஜான் கெர்ரி அளித்த பதிலாவது:-

அது வேற... இது வேற

அது வேற... இது வேற

இது சாதாரண விசயமல்ல, மிகப்பெரியது. அப்போது இருந்த அரசு வேறு, இப்போது ஆளும் அரசு வேறு.

சந்தேகமேயில்லை...

சந்தேகமேயில்லை...

இப்போது நாங்கள் மோடியை வரவேற்கிறோம். நிச்சயமாக அவருக்கு விசா வழங்கப்படும். இதில் சந்தேகத்திற்கிடமில்லை.

ஆவலாக உள்ளோம்...

ஆவலாக உள்ளோம்...

கடந்த காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா - மோடி சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.

தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் இனக் கலவரத்தைக் காரணம் காட்டி, அப்போது அங்கு முதல்வராக இருந்த மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. ஆனால், மோடி பிரதமரானதைத் தொடர்ந்து விழுந்தடித்துக் கொண்டு அவரை வருக வருக என வரவேற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In perhaps the first explanation of the US denial of visa for Narendra Modi, the Obama Administration on Thursday said the decision was taken by the "previous" government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X