For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசு காவலர்கள் தாக்குதல்.. அஞ்சும் மாநகராட்சி ஊழியர்கள்.. கேட்பாரன்றி அலையும் மாடுகள் அதிகரிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப்பின், மொகாலி மாநகராட்சியில் பராமரிப்பின்றி தெருவில் திரியும் பசுமாடுகளை பிடித்து கொண்டு செல்ல பணியாளர்கள் அஞ்சுவதால் அங்கு மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

மொகாலி கமிஷனர் தங்கள் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தாலும், பாதுகாப்பை உறுதி செய்ய இன்னும் எதுவும் செய்யவில்லை.

மாடுபிடி பிரிவின் தலைவரான, கிசார் சிங்கின் பேட்டிபடி, பிப்ரவரி 18, மார்ச் 10, மார்ச் 14, ஏப்ரல் 12, ஜூன் 2 ஆகிய இவ்வாண்டில் மட்டும் 5 நாட்களில் தங்கள் ஊழியர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்கிறார்.

போலீசார் நடவடிக்கை இல்லை

போலீசார் நடவடிக்கை இல்லை

ஒவ்வொரு தாக்குதலுக்கும் பின்னர் போலீசில் புகார் வழங்கப்பட்டது என்று கிசார் கூறுகிறார். ஆனால் அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லை அல்லது ஊழியர்களை தாக்கியவர்களை எதிர்த்து அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கத்தி வைத்து மிரட்டல்

கத்தி வைத்து மிரட்டல்

"மார்ச் 10 அன்று, எங்கள் குழு மாட்யூர் பகுதிக்கு சென்றபோது தெருவில் திரிந்த பசுக்களின் உரிமையாளர், எங்கள் ஊழியர்களில் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவேன் என்று அச்சுறுத்தினார். எனவே, நாங்கள் பசுக்களை விடுவிக்க வேண்டியதாயிற்று. இது முதல் நிகழ்வு அல்ல. மாடுகளை பிடிக்கப் போகும் போதெல்லாம் இப்படி நடக்கிறது, "என்று கேசர் சிங் கூறியுள்ளார்.

பார்க் பக்கம் மேய்ச்சல்

பார்க் பக்கம் மேய்ச்சல்

கால்நடை உரிமையாளர்கள் பசுக்களை, சுதந்திரமாகச் சாப்பிட்டு தெருக்களில் அலைய அனுமதிக்கிறார்கள். அவர்கள் பொதுவாக புல்வெளிகள் அதிகமுள்ள பூங்காக்களுக்கு அருகிலேயே பசுக்களை விடுவிக்கிறார்கள்.

அபராத தொகை

அபராத தொகை

பசுக்களை பிடித்து உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் என்ற வகையில் மட்டும் மொகாலி மாகராட்சி ரூ.3.17 லட்சம் சம்பாதித்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாக பசுக்களை பிடிக்க முடியாமல் வருமானம் குறைந்துவிட்டது. பசு காவலர்கள் அதிகரித்துவிட்டதால் இனிமேல் பல நகரங்களிலும் இப்படி பசு மாடுகள் தெருவில் அலையவிடுவது அதிகரிக்கும் என நம்பலாம்.

English summary
Staffs at the Mohali Municipal Corporation’s stray cattle catching department have stopped work out of fear of being attacked by the owners of the cattle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X