குஜராத் தேர்தல்.. மோர்பி பால விபத்தால் எம்எல்ஏவுக்கு கல்தா.. மீட்பு பணி செய்தவருக்கு பாஜகவில் சீட்
காந்திநகர்: குஜராத் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான நிலையில் மோர்பி சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏவுக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக பொதுமக்களை காக்க ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டு மக்கள் பாராட்டை பெற்றவருக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது.
குஜராத் மாநில சட்டசபை தொகுதிக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ம் தேதியும், 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

குஜராத் தேர்தல்
குஜராத்தில் தற்போது மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என 3 கட்சிகளும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர ஆலோசனை செய்து வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.

பாஜக வேட்பாளர் பட்டியல்
இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 160 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்டது. அதன்படி குஜராத் முதல்வராக உள்ள பூபேந்திர படேல் கட்லோடியா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த ஹர்த்திக் படேல் விரம்கம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இன்னும் 22 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது.

கேபிள் பால விபத்து
இதற்கிடையே தான் குஜராத்தில் கடந்த மாதம் 30ம் தேதி மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்து 135 பேர் பலியாகினர். 142 ஆண்டு பழமையான கேபிள் பாலத்தை புனரமைக்க முன்அனுபவம் இல்லாத நிறுவனத்துக்கு வழங்கியதே விபத்துக்கு காரணம் எனவும், இதற்கு ஆளும் பாஜக தான் காரணம் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் இந்த விபத்து என்பது குஜராத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

எம்எல்ஏ மாற்றம்
இந்நிலையில் தான் மோர்பி சட்டசபை தொகுதியில் தற்போதைய பாஜக எம்எல்ஏவாக உள்ள பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக 60 வயது நிரம்பிய முன்னாள் எம்எல்ஏவான கந்திலால் அம்ருதியா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் மோர்பி பால விபத்தின்போது உயிர்காப்பு உபகரணத்தின் உதவியுடன் ஆற்றில் குதித்து மக்களை மீட்டார். இவரது செயல்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தான் கந்திலால் அம்ருதியாவுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications