For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வியாபம் ஊழலால் பெரும் அமளி.. மோதல்.. ம.பி. சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

போபால்: வியாபம் ஊழல் விவகாரத்தால் பெரும் அமளியும் மோதலும் நீடித்ததால் மத்திய பிரதேச சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச சட்டசபை கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது அரசு பணியாளர் தேர்வு வாரிய ஊழலான வியாபம் விவகாரம் பெரும் புயலை கிளப்பியது.

MP assembly adjourned sine die over Vyapam scam

நேற்று தொடர்ந்து 2வது நாளாக காரசார விவாதங்களால் ஏற்பட்ட அமளியால் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள அறையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் விவாதித்தனர். இது தொடர்பாக சுந்தர்லால் எம்.எல்.ஏ.வும், மற்றவர்களும் செய்தியாளர்களை சந்தித்து, முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பதவி விலக வலியுறுத்தினர்.

அப்போது அவர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சுதர்சன் குப்தா, ராமேஷ்வர் சர்மா குப்தா உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலானது.

செருப்பை தூக்கி காண்பித்த எம்.எல்.ஏ.?

இது பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்றும் அம்மாநில சட்டசபையில் வியாபம் ஊழல் விவகாரம் வெடித்தது. இன்று கூட்டம் தொடங்கியதும் சபையின் மையப்பகுதிக்கு வந்த பகுஜன் சமாஜ்கட்சி உறுப்பினர்கள் முதல்வர் சவுகான் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பாரதிய ஜனதாவின் நரேந்திர குஷாவ் அந்த எம்.எல்.ஏ.க்களை மூர்க்கத்தனமாக தள்ளிவிட்டார். மேலும் குஷாவ் தங்களை நோக்கி செருப்பால் அடிப்பதாக எடுத்துக் காட்டியதாகவும் பகுஜன் எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டிய்னர். ஆனால் இதை குஷாவ் மறுத்தார்.

இதனால் சபை நடவடிக்கைகள் 2 முறை ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் சபை கூடிய போது சவுகான் பதவி விலக காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். கடைசியாக சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயர் சிதசரன் சர்மா அறிவித்தார்.

இந்த நடப்புக் கூட்டத் தொடர் வரும் 31-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. தற்போது 9 நாட்களுக்கு முன்னதாக சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

English summary
In Madhya Pradesh, Monsoon session of the state assembly was adjourned sine die today over VYAPAM controversy, nine days before the scheduled time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X