டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு நாற்காலி போட்டு மைத்ரேயன் தர்ணா... பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் ஆணையம் முன்பு நாற்காலி போட்டு ஓபிஎஸ் ஆதரவு எம்பி தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக அதிமுகவின் இரு அணிகளும் மாறி மாறி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக அம்மா அணியினர் 4 லாரிகளில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

MP Maythreyan conducts protest in front of Delhi election commission

இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய சென்றனர். அப்போது தேர்தல் ஆணையத்தின் பாதுகாவலர்கள் ஓபிஎஸ் அணியினரின் வாகனங்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து எம்பி மைத்ரேயன் தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே தர்ணாவில் ஈடுபட்டார். தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு நாற்காலி போட்டு அமர்ந்த அவர் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் டெல்லி தேர்தல் ஆணைய வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
OPS team MP Mythreyan conducts protest in front of Delhi election commission. Election commission not permiting ops team vehicles to submit the documents.
Please Wait while comments are loading...