காவிரி: கர்நாடகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... தேர்தலுக்காக தமிழகத்தின் முதுகில் குத்தும் பாஜக

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் பாஜக பாதிப்பை ஏற்படுத்தாது என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் இன்று பெங்களூரில் தெரிவித்தார்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் பாஜக தனித்தோ அல்லது யார் முதுகிலாவது சவாரி செய்து கொண்டோ பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது.

அந்த வகையில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதுபோல் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.

காவிரி பிரச்சினை

காவிரி பிரச்சினை

இதனால் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும், பாஜகவின் அமித் ஷாவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் காவிரி விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையே பெரும் பிரச்சினையாகியுள்ளது.

தமிழக பாஜக

தமிழக பாஜக

கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவிரி வாரியம் அமைத்தே தீர வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்களோ காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்று வாய்ச்சவடால் விடுகின்றனர்.

பாஜக செயல்பாடுகள்

பாஜக செயல்பாடுகள்

காவிரி பிரச்சினை இழுத்தடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் பெங்களூர் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன.

தேர்தல் அறிக்கையில்...

தேர்தல் அறிக்கையில்...

காவிரி விவகாரத்தில் பாஜகவின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம் என்று முரளிதர ராவ் கூறியுள்ளார். இவரது பேச்சு தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Muralidhara Rao says that BJP wont act against to Karnataka in the Cauvery issue. This assurance will be given in election manifesto.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற