ஏவுகணை நாயகனுக்கு புதிய அருங்காட்சியகம்.. கேரளாவில் இன்று திறப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட உள்ளது.

அப்துல் கலாமின் கோட்பாடுகளை பிரபலப்படுத்தும் அமைப்பான டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு 'டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்' என பெயரிடப்பட்டுள்ளது.

Museum Dedicated To Dr APJ Abdul Kalam To Open In Kerala

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். மேலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் கே.சிவன் மற்றும் கேரளா சட்ட சபையின் துணை சபாநாயகர் வி.சசி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

Abdul Kalam's most famous quotes, a tribute to him

இதுபற்றி டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி ஷாஜு டேவிட் அல்ஃபி கூறும்போது, 'முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் வாழ்க்கையை பின்பற்றுவதன் மூலம் இளைஞர் சமுதாயம் வாழ்வில் சாதிக்க முடியும் என்ற உணர்வை இந்த அருங்காட்சியகம் ஏற்படுத்தும்' என கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Museum Dedicated To Former President Dr APJ Abdul Kalam To Open In Kerala.
Please Wait while comments are loading...