For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நகரி: தெலுங்குதேசக்கட்சியினர் முற்றுகை…. சிக்கித் தவித்த ரோஜா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நகரி: ஆந்திர மாநிலம், நகரி நகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரோஜா, தெலுங்கு தேச கட்சியினரின் முற்றுகை போராட்ட டத்தால் சுமார் ஒரு மணி நேரம் வெளியே வரமுடியாமல் தவித்தார்.

நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தெலுங்கு தேச உறுப்பினர்கள் வருவதற்கு முன்னரே, அவைத் தலைவர் சாந்தி, அவை நிகழ்ச்சிக் குறிப்பைப்படிக்க தொடங்கினார்.

உறுப்பினர் இல்லை

உறுப்பினர் இல்லை

இதற்கு, போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததாலும், எம்.பி வராததாலும், கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு, ஆணையர் சாம்பசிவராவ், ரோஜாவிற்கு அறிவுறுத்தினார்.

சம்மதிக்காத ரோஜா

சம்மதிக்காத ரோஜா

இதற்கு ரோஜா உட்பட ஒய்.எஸ்.ஆர் கவுன்சிலர்கள் சம்மதிக்க வில்லை. இதனை தொடர்ந்து ஆணையர் சபையில் இருந்து வெளியே சென்று விட்டார்.

கூச்சல் குழப்பம்

கூச்சல் குழப்பம்

இந்த சமயத்தில் தெலுங்கு தேச நகராட்சி உறுப்பினர்கள் அவைக்குள் நுழைந்தனர். அவையை ஒத்தி வைக்கும்படி கூறியும், பெரும் கூச்சலிடையே, தலைவர் சாந்தி, நிகழ்ச்சிக் குறிப்பை தொடர்ந்து படித்து முடித்தார்.

அமளி முற்றுகை

அமளி முற்றுகை

இதனால், அவையில், அமளி ஏற்பட்டது. தெலுங்கு தேச உறுப் பினர்கள் நகரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த முற்றுகை போராட்டம் நீடித்தது.

சிக்கித்தவித்த ரோஜா

சிக்கித்தவித்த ரோஜா

அவைக்குள் இருந்த எம்.எல்.ஏ ரோஜா, நகர மன்ற தலைவர் சாந்தி உட்பட யாரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். பின்னர் தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து, ரோஜாவை மீட்டு அனுப்பி வைத்தனர்.

English summary
The first council meeting of Nagari Municipality was put off amid unruly scenes on Wednesday, following heated arguments between YSRC and TDP members. TDP members staged a protest in front of the municipal office. After a three hour long stir, officials announced that the meeting had been put off to a later date. Ms. Roja was confined to the council hall for an hour following the TDP agitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X