For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகனின் சேமிப்பு பணத்தில் அபராதம் செலுத்திய ஆட்டோ ஓட்டுநர்....மனம் பொறுக்காத அதிகாரியின் மனித நேயம்

Google Oneindia Tamil News

நாக்பூர்: நோ பார்க்கிங் இல் வாகனத்தை நிறுத்தியால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது இளம் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு.. அவர் தனது மகனின் உண்டியல் சேமிப்பு பணம் 2 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்த கட்ட முன்வந்தார். இதை கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தானே அந்த அபராதத்தை கட்டி ஆட்டோவை அவரிடம் ஒப்படைத்தார்,

நாக்பூர் போலீசாரின் இந்த செயலால் சிறுவனின் உண்டியல் சேமிப்பு அவருக்கே திரும்பி அளிக்கப்பட்டது. அத்துடன் ஆட்டோவும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாக்பூர் போலீஸ் அதிகாரியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் மக்களின் இதயங்களை வென்றுள்ளது. பலரும் நாக்பூர் போலீஸ் அதிகாரி அஜய்குமார் மாளவியாவை பாராட்டி வருகிறார்கள்.

மூக்கில் உரிஞ்சும் வகையில் கொரோனா தடுப்பு மருந்து.. 2 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி! மூக்கில் உரிஞ்சும் வகையில் கொரோனா தடுப்பு மருந்து.. 2 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி!

பெரும்பாலான காவலர்கள் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்பதால் அவர்களை கடுமையான குணம் படைத்தவர்கள், இரக்கமே இல்லாதவர்கள் என்றெல்லாம் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களின் இளகிய மனம் அடிக்கடி வெளிப்படும். அப்படித்தான் நாக்பூரில் வெளிப்பட்டுள்ளது,

நோ பார்க்கிங்

நோ பார்க்கிங்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த ஆகஸ்ட் 8 ம் தேதி ரோஹித் கட்சே என்ற ஆட்டோ டிரைவர் வாகன நிறுத்தம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தியதற்காக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். பரிவாகன் இணையதளத்தில் அவர் பெயருக்கு எதிராக முன்பு பணம் செலுத்தாத சலனங்கள் இருந்தது. இதனால் அவரது ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

 மகனின் உண்டியல் பணம்

மகனின் உண்டியல் பணம்

ஆனால் ரோஹித் கட்சே நீண்டகால ஊரடங்கு காரணமாக, கட்சே கடனில் இருந்தார். அவரிடம் எந்த சேமிப்பும் இல்லை. கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தார். வேறு வழியே இல்லாத சூழலில் அவரது குழந்தை சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்துடன் ஆட்டோவை மீட்பதற்காக சேமிப்பை அபராதமாக வழங்க வந்திருக்கிறார்.

 நாக்பூர் போலீசார்

நாக்பூர் போலீசார்

ஆனால் , கவுண்டரில் ஏற்க மறுத்துவிட்டனர். இதை உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து நாக்பூரில் உள்ள சீதாபுல்டி போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மாளவியா, தானே அவரது 2000 அபராதத்தை செலுத்தினார். அத்துடன் அவரது நிலைமைக்கு அனுதாபம் தெரிவித்தாலும், இனிமேல் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு டிரைவரை எச்சரித்தார். இதை நாக்பூர் போலீசார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

 காவல்துறைக்கு பாராட்டு

காவல்துறைக்கு பாராட்டு

சமூக ஊடகங்களில் இதை பார்த்த மக்கள் பலர் காவல் துறை அதிகாரியான அஜய்குமார் மாளவியாவை பாராட்டி உள்ளார்கள். மக்களின் இதயங்களை நாக்பூர் போலீசார் வென்றுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ ரோஹித் கட்சேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

English summary
The Nagpur cop decided to pay the fine himself after he saw the young auto driver was forced to arrange the money from his little son’s piggy bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X