For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் பிரச்சாரத்தில் குதித்த மோடியின் அண்ணன், தம்பிகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

காந்திநகர்: நேரந்திரமோடிக்கு ஆதரவாக அவரது சகோதரர்களுக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

மோடி போட்டியிடும் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் அவரின் மூத்த மற்றும் இளைய சகோதரர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன், பிற்படுத்தப்பட்ட ஜாதிப்பிரிவினரின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Narendra Modi’s brothers campaign for him

மோடியின் அண்ணன் சோமாபாய் மோடி, வாரணாசியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். மோடியின் தம்பி பிரகலாத், வதோதராவில் நடந்த தேர்தல் கூட்டங்களுக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 15 நாட்களாக வாரணாசியில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை பார்த்துள்ளார்.

இதுபற்றி பிரகலாத் கூறுகையில், வாரணாசியில் இருந்து எனது அண்ணன் போட்டியிடுவதை தெரிந்துகொண்டதும் அங்கு இரு வாரங்கள் சென்று தங்கியிருந்து தேர்தல் வேலை பார்த்தேன். 'நரேந்திரமோடிபாய்' மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பை பார்த்து எனக்கு வியப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக புனே சென்றிருந்தேன். அங்கு மோடியின் தம்பி என்று எனஅனை அறிந்துகொண்டதும் எனக்கு கிடைத்த வரவேற்பே தனிதான் என்றார்.

நரேந்திரமோடி முதல்வராக பதவி வகிப்பதால் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதில்லை. சகோதரர்கள் வீட்டுக்கு எப்போதாவதுதான் செல்வது வழக்கம், ஆனால் அவர் அழைக்காமலேயே மோடிக்காக அவரது சகோதரர்கள் ஒடிவந்து தேர்தல் பணியாற்றுவதாக பாஜகவினர் கூறுகிறார்கள்.

மோடியின் தம்பி பிரகலாத், அகமதாபாத்தில் ரேசன் கடை நடத்தி வருகிறார். அண்ணன் சோமாபாய் வட்நகரில் முதியோர் இல்லம் நடத்துகிறார். மோடியின் கடைசி தம்பி, பங்கஜ் மாநில அரசு ஊழியராக உள்ளார்.

English summary
For the records, he had disassociated himself from the family barring occasional visits and the family had let it be so. But as he runs for the top job of the country, the brothers of BJP's Prime Ministerial Candidate Narendra Modi have come out to extend their support to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X